-->

நான் ஏன் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தேன் தெரியுமா? அபிஷேக் பச்சன் கூறிய காரணம்

ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் இடையே பிரச்சனை

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக அறியப்படும் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் மண வாழ்க்கையில் இணைந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராயை தான் எதற்காக திருமணம் செய்தேன் என்பதை அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

அழகு

ஐஸ்வர்யா ராய் ஒரு உலக அழகி என்பதால் நான் அவரை திருமணம் செய்யவில்லை. அழகை அடிப்படையாக கொண்டது அல்ல எங்களின் உறவு. அவர் ஒரு மிக பிரபலமான நடிகை என்பதாலும் நான் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

குணம்

எனக்கு மேக்கப் போடாமல் இயல்பாக உள்ள ஐஸ்வர்யா ராயை தான் பிடிக்கும். ஐஸ்வர்யாவின் நல்ல குணத்திற்காகத்தான் நான் அவரை காதலித்து திருமணம் செய்தேன். ஐஸ்வர்யா ராயை பார்த்து ரசிகர்கள் விசில் அடிப்பது எனக்கு பழக்கமாகிவிட்டது. நான் அவரை கவர்வதற்கு ஒருநாளும் விசில் அடித்தது இல்லை.

திருமணம்

ஐஸ்வர்யா-அபிஷேக் தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். மகள் பிறந்ததால் சில காலம் நடிக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா ராய். தற்போது மகள் வளர்ந்து விட்டதால் ஐஸ்வர்யா மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

பிரச்சனை

சமீபகாலமாக ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக்கிற்கும் இடையே சரியான புரிதல் இல்லை என்றும், ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இருவரும் தனித்தனியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் கணவரின் போனை எடுத்து, அவர் யாரிடம் எல்லாம் பேசுகிறார் என்பதை ஐஸ்வர்யா ராய் கண்காணித்ததாவும், இதனால் ஐஸ்வர்யா மீது அபிஷேக் கோபப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இதனிடையே அபிஷேக் பச்சனின் இந்த பேச்சால் அவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்பது தெளிவாகிறது.

அபிஷேக்கின் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?
இது குறித்த உங்கள் கருத்துகளை கமெண்ட் பாக்ஸ்ல் பதிவிடுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் பெற ‘பின்பற்ற’ என்ற ஆப்சனை கிளிக் செய்து எங்களுடன் இணைந்திடுங்கள்.



Previous Post Next Post