Header Ads

கிரில்டு இறால் - Grilled Prawn

சுவையான இறால்

தேவையான பொருட்கள்:
  1. இறால் - 500 கிராம்
  2. பூண்டு - 4-5 பெரியது
  3. எலுமிச்சை சாறு - 3 மேசைக்கரண்டி
  4. ஆலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  5. அரைத்த மிளகு - 1 தேக்கரண்டி
  6. நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி
  7. உப்பு - சுவைக்கேற்ப


செய்முறை:
1.கொத்தமல்லி இலையை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2.இறால், நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

3.கிரில்லை சூடாக்கி அனைத்து இறால்களையும்  ஒரே லேயராக பெரிய ஆவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.

4.பாத்திரத்தை கிரில்ன் கீழ் வைக்கவும்.

5.இறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.

6.பாத்திரத்தை வெளியே எடுத்து, இறால்களைத் திருப்பவும்.
மறு புறமும் 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.

7.பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான க்ரில்டு இறால் ரெடி.


No comments