-->

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் ஏன் வருகிறது? கர்ப்ப கால சர்க்கரை நோயை எவ்வாறு தடுக்கலாம்?

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய்

ஒரு சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் சர்க்கரை நோய் ஏற்படும். இதை கர்ப்ப கால சர்க்கரை நோய் என்று கூறுவார்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இன்சுலின் என்னும் திரவம் தான் கட்டுப்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் நச்சுகொடியில் உருவாகும் ஒரு சில திரவங்கள் இன்சுலின் உருவாவதை கட்டுப்படுத்துகிறது. இதனால் இன்சுலின் வேலை செய்ய முடியாமல் முடங்குகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

கர்ப்ப கால நீரிழவு நோய்


சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம். இவர்கள் மகப்பேறு மருத்துவவரை தொடர்ந்து சந்தித்து சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சிறுவயதிலிருந்தே சர்க்கரை நோய் உள்ளவர்களும் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான காரணங்கள் எவை?

1. உடல் எடையானது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும்போது சர்க்கரை நோய் வரும்.
2. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா ஆகியோருக்கு சர்க்கரை நோய் பரம்பரையாக இருந்தால் சர்க்கரை நோய் வரும்.
3. உங்களின் முதல் குழந்தை பெரிய குழந்தையாக இருந்திருந்தால்.
4. அதிக கொலஸ்ட்ரால் உடையவராக இருந்தால் சர்க்கரை நோய் வரும்.

தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால் குழந்தைக்கு என்ன பாதிப்பு உண்டாகும்?

1. பிரசவத்தின் போது பெரிய குழந்தை பிறக்கும்.
2. குழந்தையானது குறிப்பிட்ட பிரசவ நாளுக்கு முன்பே பிறக்கும்.
3. குழந்தையின் நுரையிரல் சரியான வளர்ச்சி அடையாது. இதனால் சுவாச பிரச்சனை ஏற்படலாம்.
4. குழந்தையின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.
5. குழந்தைக்கு மஞ்சள் காமாலை வரும் வாய்ப்பு அதிகமாகும்.

கர்ப்ப கால சர்க்கரை நோயை எவ்வாறு தடுக்கலாம்?

கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபடுத்த இன்சுலின் தேவை. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க மாத்திரைகளை சாப்பிடுவதை விட இன்சுலின் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் மாத்திரையில் இருக்கும் வீரியதன்மையானது அம்மாவிடமிருந்து குழந்தைக்கு செல்லும். ஆனால், இன்சுலினானது தொப்புள் கொடியை தாண்டி குழந்தைக்கு செல்லாது. இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.



அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.  


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.

Previous Post Next Post