Header Ads

சேலம் மட்டன் குழம்பு - Salem Mutton Kuzhambu

சேலம் மட்டன் குழம்பு

தேவையானவை பொருட்கள் :
  1. மட்டன் - 1 கிலோ,
  2. மிளகு - 1 டீஸ்பூன்,
  3. சீரகம் - 1 டீஸ்பூன்,
  4. சோம்பு - 1 டீஸ்பூன்,
  5. கசகசா - 1 டீஸ்பூன்,
  6. தேங்காய் - 1 மூடி,
  7. இஞ்சி - 2 துண்டு,
  8. பூண்டு - 25 பல்,
  9. காய்ந்த மிளகாய் - 10,
  10. கிராம்பு - 2,
  11. ஏலக்காய் - 2,
  12. பிரிஞ்சி இலை – சிறிதளவு
  13. கறிவேப்பிலை - 20,
  14. எண்ணெய் - 4 ஸ்பூன்,
  15. உப்பு - தேவையான அளவு.
  16. சின்ன வெங்காயம் - 1/2 கிலோ,
  17. தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
  18. தக்காளி - 1,
  19. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
  20. பட்டை – சிறிதளவு


செய்முறை:

1. முதலில் மிக்ஸ்சியில் பூண்டு, இஞ்சியை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

2. மட்டனை நன்கு கழுவி சிறிது உப்பு, மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து, குக்கரில் ஐந்து விசில் விட்டு வேக வைக்கவும்.

3.கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, மிளகாய்,கறிவேப்பிலை, சீரகம், மிளகு சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.

4. அதே எண்ணெயில் சிறிதளவு வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்..

5.வெறும் கடாயில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும்.

வறுத்தவைகளை தனித்தனியாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் மீதி எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்க்கவும்.பொரிந்தவுடன் மீதமுள்ள வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.

4.வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி, கருவேப்பிலை, மட்டன் சேர்த்து வதக்கவும்.

6. றிது நேரம் வதக்கிய பின், முதலில் அரைத்த மிளகாய் மற்றும் சீரகம், மிளகு, தனியா தூள் சேர்த்து, ஐந்து நிமிடம் வதக்கவும்.பிறகு அரைத்த வெங்காய விழுதை, தண்ணீரில் கரைத்து ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.


7.பத்து நிமிடம் கொதித்த பின், அரைத்த தேங்காய், கசகசா விழுதை கெட்டியாக கரைத்து ஊற்றவும்.ஐந்து நிமிடம் கொதித்த பின் இறக்கினால் சுவையான சேலம் மட்டன் குழம்பு ரெடி .

No comments