-->

மேல்நோக்கு, கீழ்நோக்கு, சமநோக்கு நாட்கள் என்றால் என்ன?


மேல்நோக்கு, கீழ்நோக்கு, சமநோக்கு நாட்கள்


நாம் தினமும் தினசரி கலெண்டர் பார்க்கும் பழக்கமுடையவராக இருந்தால் அதில் ஒரு சிறிய அம்புகுறியுடன் மேல்நோக்கு நாள், கீழ்நோக்குநாள், சமநோக்குநாள் என குறிப்பிட்டு இருப்பதை பார்த்திருப்போம். அவ்வாறு ஏன் குறிபிட்டு இருக்கிறது, அதன் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அது ஏன் குறிப்பிட்டு இருக்கிறது, அதன் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

சமநோக்கு நாள் என்றால் என்ன

ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்களை ‘ஊர்த்துவமுக நட்சத்திரங்கள்’ என்பர். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேல் நோக்கி செய்யும் வேலைகளான கட்டிடம் கட்டுவது, கொடிமரம், மதில், பந்தல் ஆகிய இவற்றை கட்டலாம் அல்லது ஆரம்பிக்கலாம். அதே போல விவசாயிகள் நெல், ராகி, வாழை, கரும்பு பயிர்கள், தேக்கு, மா, பலா ஆகிய மரங்களை வைப்பது உத்தமமான பலன்களை கொடுக்கும். அதனால் இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களை ‘மேல்நோக்கு நாள்’ என்கிறார்கள்.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளான குளம், கிணறு, வேலி ஆகிய இவற்றை தோண்டலாம். மேற்கண்ட நட்சத்திரங்களை ‘அதோமுக நட்சத்திரம்’ என்பர். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் விவசாயிகள் மஞ்சள், மணிலா கிழங்கு வகைகள் ஆகிய மண்ணிற்கு கீழ் வளரக்கூடிய காய்கறிகள், கிழங்குகள் ஆகியவற்றை பயிரிடலாம். அதனால் இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களை ‘கீழ் நோக்கு நாள்’ என்கிறார்கள்.

அசுவினி, மிருகசீரிஷம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய இந்த நட்சத்திரங்களை ‘திரியக்முக நட்சத்திரங்கள்’ என்பர். இந்த நட்சத்திரம் வரும் நாளில் யானை, குதிரை, ஒட்டகம், எருமை, கழுதை, ரிஷபம் முதலிய நான்கு கால் பிராணிகள், கிரயம் வாங்குதல், மேய்த்தல், ஏற்றம், உழவு, வாசக்கால் வைப்பது, தூண் எழுப்புவது முதலியன காரியங்களை செய்வதற்கு ஏற்ற நாட்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களை ‘சமநோக்கு நாள்’ என்கிறார்கள்.
மேற்கண்ட நாட்களில் அதற்குரிய வேலைகளை செய்தால் செய்யும் காரியம் சித்தியாகும் என்பது நம்பிக்கை.

Previous Post Next Post