பெண் நட்சத்திர ருது பலன்கள்


ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பிறப்பு மற்றும் இறப்பு இருவருக்கும் பொதுவானது. ஒருவருடைய வாழ்க்கையின் நிலையை அறிந்து கொள்ள அவரின் பிறந்த ஜாதகத்தையே பயன்படுத்த வேண்டுமென்று நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். காரணம் ஒருவர் பிறக்கின்ற போது இருக்கின்ற கிரகநிலைகளை அடிப்படையாக கொண்டே அவரின் வாழ்வில் ஏற்படும் லாப நஷ்டங்களை துல்லியமாக கணிக்க முடியும். இருந்தாலும் பெண்கள் வயதுக்கு வரும் நேரம் நட்சத்திரம் இவைகளை வைத்து சில ஜோதிட பலன்கள் சொல்லபட்டிருக்கின்றது.ஒரு பெண் வயதுக்கு வருவது என்பதே பெண்மையின் மறுபிறப்பு. எனவே அதை அடிப்படையாகவும் வைத்து பலன்களை அறிய முடியும் என்கிறார்கள். அந்த அடிப்படையில் ஒரு பெண் எந்த நட்சத்திரத்தில் ருதுவானால் என்ன பலன் என்பது கீழே கொடுக்கபட்டுள்ளது.

பெண் எந்தெந்த நக்ஷத்திரத்தில் ருது வானால் என்னென்ன பலன்

1.
அசுவினி நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால்- பழி வாங்கும் குணம் ஏற்படும். துஷ்ட செய்கைகளை செய்து அவப்பெயர் வாங்குவார்கள்.

2.
பரணி நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் நல்ல சந்ததி உண்டாகும்.

3.
கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் குழந்தை பிறக்க தாமதம் ஆகும்.

4.
ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் நன்மைகளை உடையவள்

5.
மிருகசீரிஷம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் கணவனுக்கு இனியவளாக இருப்பாள்.

6.
திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் பிறரை காலப்போக்கில் வெறுப்பாள். எதிர்மறை எண்ணங்கள் அதிகம் ஏற்படும்.

7.
புனர்பூசம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் சுகத்தை உடையவள்

8.
பூசம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் லக்ஷ்மி கடாகஷம் உண்டு.

9.
ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம். பிற்காலத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

10.
மகம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் கணவனுக்கு நல்லவள்

11.
பூரம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் குழந்தை பிறக்க தாமதம் ஆகும். அவல் கர்ப்ப காலங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும்.

12.
உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் பிறருக்கு உதவக் கூடியவளாக இருப்பாள்.

13.
அஸ்தம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் நல்லவளாக இருப்பாள்.

14.
சித்திரை நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் அறிவாளியாக இருப்பாள்.

15.
சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் குடும்பத்தில் அடிக்கடி கலகம் ஏற்படும்.

16.
விசாகம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் உடல் ரீதியாக மருத்துவ செலவுகள் அதிகம் இருக்கும்.

17.
அனுஷம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் வியாதியை தரும்

18.
கேட்டை நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் கற்புக்கு களங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

19.
மூலம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் நன்மை உடையவள்.

20.
பூராடம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் பிறருக்கு அடிமையாக இருக்க நேரிடும் அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் பிறர் வசம் இருக்க நேரிடும்.

21.
உத்திராடம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் தர்ம, நியாயங்களை அறிந்தவள்.22.
திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் பாக்கியவதி

23.
அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் பொருளை உடையவள். வாழ்வின் பிற்பகுதியில் லக்ஷ்மி கடாக்ஷம் உண்டு.

24.
சதயம் நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் பொருள்களை இழக்க நேரிடும்.

25.
பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் பிள்ளை பிறக்க தாமதம் ஆகும்.

26.
உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் நிலையற்ற செல்வத்தை தரும். இதனால் அடிக்கடி பணத்தட்டுப்பாடு ஏற்படும்.

27.
ரேவதி நட்சத்திரம் வரும் நாளில் பெண் ருது வானால் உடல் ரீதியாக அதிக கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக மருத்துவ செலவுகள் தரும்.