-->
பலவகையான மனிதர்கள் கனவு பலன்கள்
- துறவிகளை கனவில் கண்டால் பெரியவர்கள் உதவி
தகுந்த நேரத்தில் கிடைக்கும் என்று பொருள்.
- வழுக்கை தலை கொண்ட ஒருவரை கனவில் கண்டால்
அது உங்கள் கணவராக இருந்தால் நன்மை உண்டு. அதுவே வேறு ஒரு அந்நிய மனிதரை வழுக்கை
தலையுடன் நீங்கள் கனவில் பார்த்தால் கையில் காசு தங்குவது அரிது. கடன் வாங்க
வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று அர்த்தம்.
- பெரிய கூட்டத்தை கனவில் கண்டால் அது கல்யாண
வீடாக இருந்தால் நல்லது கிடையாது. அதுவே ஒரு இறந்த வீடாக இருந்தால் நல்லது என்று
பொருள்.
- கோயில் மற்றும் அது சம்பந்தமான குளம்,
மரம், போன்ற இடங்களில் கூட்டத்தை கனவில் கண்டால் கண்டால் தொழில் மேன் மேலும்
விருத்தி அடையும் என்று அர்த்தம்.
- அரசன் அல்லது அரசியை கனவில் கண்டால் ஆளும்
அரசாங்கத்தால் நன்மைகள் உண்டு. மற்றும் தீடீர் தனலாபம் ஏற்படும் என்றும் அர்த்தம்.
- ஊனமுற்றவர்கள் அல்லது மாற்று திறனாளிகளை கனவில்
கண்டால் உங்களுக்குள் மறைந்திருந்த திறமைகள் தேவையான நேரத்தில் வெளிப்படும் என்று
அர்த்தம்.
- மனநலம் பாதிக்கபட்டவர்கள் அல்லது மனநல
மருத்துவமனை ஆகியவற்றை கனவில் கண்டால் நீங்கள் வரும் வரும் நாட்களில் நிதானம் தவறி
எதையோ செய்ய போகிறீர்கள் என்று அர்த்தம். அதனால் பிற்காலத்தில் பிரச்சனைளை
சந்திக்க நேரிடலாம் என்று பொருள்.
- கனவில் உங்கள் பெற்றோரை கண்டால் நாம்
மனதில் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும் என்று அர்த்தம்.
- நாம் இறந்து விட்டதாக கனவு கண்டால் உங்கள்
ஆயுள் கூடும். நமக்கு வேண்டப்பட்ட யாராவது இறந்துவிட்டது போல கனவு கண்டால் நம்மை
சூழ்ந்திருந்த துன்பங்கள் விலகும் என்று பொருள்.
- எதிரிகள், துரோகிகள், விரோதிகள்
போன்றவர்களை கனவில் கண்டால் நன்மை அல்ல. அதனால் நம்மை நோக்கி பிரச்சனை வரபோகிறது
என்று என்று அர்த்தம். அதனால் கவனமாக இருப்பது நல்லது.
- வயதானவர்களை கனவில் கண்டால் மிகவும் நல்லது.
- ஆசிரியர் அல்லது குருவை கனவில் கண்டால்
நன்மைகள் வந்து சேரும். செல்வம் மற்றும் செல்வாக்கு நிலை உயரும் என்று பொருள்.
- சிறு குழந்தைகளை கனவில் கண்டால் எல்லா
விதமான நன்மைகளும் ஏற்படும் என்று பொருள்.
- கர்ப்பிணிகளை கனவில் கண்டால் வம்சம்
விருத்தியாகும் என்று பொருள். இரண்டு கர்ப்பிணி பெண்களை கனவில் கண்டால் இரட்டை
குழந்தைகள் பிறக்க கூட வாய்ப்புகள் உண்டு என்று அர்த்தம்.
- குள்ள மனிதர்களை கனவில் கண்டால் பிறரால்
ஏமாற்றப்பட கூடிய வாய்ப்புகள் உருவாகும் என்று அர்த்தம்.
- வாய்பேச இயலாதவர்கள்/ ஊமைகளை கனவில்
கண்டால் உங்கள் வாயால் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும் என்று அர்த்தம், ஆகையால்
எச்சரிக்கையாக பேசவும்.
- குடுகுடுபைக்காரனை கனவில் கண்டால் விரைவில்
நல்ல செய்தி வரபோகிறது என்று அர்த்தம்.
- தபால்காரர் / போஸ்ட்மேன் கனவில் கண்டால்
உங்களை சந்தோஷபடுத்த நல்ல செய்தி வரும் என்று பொருள்.
- வேலையில் இருந்து நம்மை நீக்குவது போல கனவு
கண்டால் நல்லதல்ல, வேலையில் ஏதேனும் சிக்கல் வரலாம்.
- முனிவர்கள அல்லது யோகிகள் அல்லது மகான்கள்
ஆகியோரை கனவில் கண்டால் நல்லது. இது நீங்கள் பொது வாழ்கையில் ஈடுபடுவதற்கான
அறிகுறியாகும்.
- திருநங்கைகளை கனவில் கண்டால் உங்களுக்கு
கெட்ட பெயர் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- குறவர்களை கனவில் கண்டால் உங்களின்
நன்மதிப்பு குறைய போகிறது என்று அர்த்தம்.
- காவலர்கள் / போலீசை கனவில் கண்டால் உங்களுக்கு
அரசாங்கத்தால் தொல்லைகள் ஏற்படலாம்.
- குருக்கள் அல்லது புரோகிதரை கனவில் கண்டால்
நெருப்பால் கெடுதல் ஏற்படலாம் என்று பொருள்.
- குழந்தை இறந்துபோவது போல கனவு கண்டால் வர
போகும் காலங்களில் கெடுதல் ஏற்படலாம் என்று அர்த்தம்.
- இறந்த குழந்தையை கனவில் கண்டாலும்
மேற்கூறிய பலனே ஏற்படும்.
- முதியவர்களை கனவில் கண்டால் நன்மைகள்
உண்டாகும்.
- நீங்கள் பிச்சை அளிப்பது போல கனவு கண்டால்
லஷ்மி கடாஷம் ஏற்படும்.
- ஒரு அந்தணரை மட்டும் கனவில் கண்டால் நன்மை
அல்ல. இரு அந்தணர்களை கனவில் கண்டால் மிகுந்த நன்மை உண்டு.
- பிணத்தை தூக்கிச் செல்வது போல கனவு கண்டால்
நன்மை ஏற்பட போகிறது என்று பொருள்.
- விதவை வீட்டிற்குள் வருவது போல கனவு
கண்டால் கெட்ட விஷயம் நடக்க போகிறது என்று அர்த்தம்.
- சுமங்கலியை கனவில் கண்டாலோ அல்லது ஒரு
சுமங்கலி வீட்டிற்குள் வருவது போல கனவு கண்டாலோ மிகுந்து நன்மை ஏற்படும் என்று
பொருள்.
- கன்னி பெண்களை கனவில் கண்டால் நன்மை ஏற்பட
போகிறது என்று பொருள்.
- குற்றவாளிகளை கனவில் கண்டால் கெட்ட பெயர்
ஏற்படலாம், உங்களின் உடைமைகள் திருடு போகலாம் என்று அர்த்தம்.
- நகை செய்பவர் / பொற்கொல்லரை கனவில் கண்டால்
தொழில் மேன்மை ஏற்படும் என்று அர்த்தம்.
இவற்றையும் படிக்கலாமே