-->
மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால்
- அத்தி மரம் உங்கள் கனவில்
வந்தால் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதை குறிக்கும்.
- ஈச்ச மரம் கனவில் வந்தால்
சொந்த பந்தங்களிடம் விரோத மனப்பான்மை ஏற்படும்.
- தோட்டம் கனவில் வந்தால் குடும்பம்
விருத்தியடைய போகிறது என்று அர்த்தம்.
- செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால், நமக்கு நல்லது நடக்க போகிறது என்று அர்த்தம்.
- செடி மற்றும் மரத்தில்
இருந்து பூக்களை பறிப்பது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.
- துளசிச்செடி கனவில் வந்தால்
கடவுளின் ஆசீர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் என்று பொருள்.
- தோட்டத்தில் பூக்கள், பழங்கள் கொத்தாக இருப்பது போல கனவு வந்தால் குடும்பம் விருத்தி அடையும்
என்று பொருள்.
- தோப்பில் இலை, காய் மற்றும் கனிகளை பறிப்பதாக கனவு காண்டால் வியாதிகள் வரும்.
- சப்பாத்திக்கள்ளி செடியை
அழிவதாகக் கனவில் கண்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
- பட்டுப்போன மரத்தை கனவில்
கண்டால், சோக நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- பூச்செண்டு கனவில் வருவது
பொருளாதார மேன்மை குறைவதை சுட்டிக் காட்டுகிறது.
- மரம் அல்லது செடி பசுமையாக
இருப்பது போல் கனவு வந்தால் சுபநிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம்.
- மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டில்
நீங்கள் தனிமையில் நடந்து செல்வது போல் கனவு வந்தால் உங்களுக்கு மிக பெரிய நல்ல
விஷயம் நடக்க போகிறது என்று அர்த்தம்.
- நீங்கள் ஒரு மரத்தில்
ஏறுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரப்போகிறது என்று அர்த்தம்.
- மலர்களை கொத்தாக இருப்பது
போல கனவு வந்தால் சொத்து சேர்க்கை ஏற்பட போகிறது என்று பொருள்.
- மலர்செடிகள், பூந்தோட்டம் நிறைய இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் வருங்காலம்
சிறப்பாக இருக்க போகிறது என்று பொருள்.
- மருதாணி செடி கனவில் வந்தால்
உங்களிடம் உள்ள நோய் நொடிகள் நீங்கி உடல் பலமாகும்
என்று பொருள்.
- முற்செடியில் உங்களின்
துணி மாட்டி கொண்டது போல கனவு வந்தால், பழைய பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.
- கத்திரிக்காய்
சாப்பிடுவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்று பொருள்.
- காய்களை நறுக்குவது போல
கனவு வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் விலக போகிறது என அர்த்தம்.