உங்களை பற்றிய பொதுவான கனவு பலன் - Expres Tamil

Header Ads

உங்களை பற்றிய பொதுவான கனவு பலன்

கனவில் யாரை கண்டால் என்ன நடக்கும்

உங்களை பற்றிய கனவு பலன்கள்

 1. நீங்கள் உங்களையே கண்ணாடியில் பார்ப்பது போல் கனவு வந்தால், கூடிய விரைவில் உங்களுக்கு திருமணம் நடைபெறப் போகின்றது என்று அர்த்தம்.
 2. யாரோ உங்களை அழகுபடுத்துவது போல கனவு வந்தால் நெருங்கிய நண்பர் நம்பிக்கை துரோகம் செய்ய போகிறார் என்று அர்த்தம்.
 3. உங்களை யாராவது அவமான படுத்துவது போல கனவு வந்தால் சிறு பிரச்சனைகளும், துன்பமும் வரபோகிறது என்று அர்த்தம்.
 4. உங்களுக்கு பிறர் ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால்,உங்களை தவறான வழியில் திசை திருப்புகிறார்கள் என்று அர்த்தம்.
 5. உங்கள் உடலில் இருந்து இரத்தம் வருவது போன்று கனவு வருவது உங்களின் திறமை அடையாளம் காணப்பட்டு உங்களுக்கு பேரும்,புகழும், கிடைக்கப்போகிறது என்று பொருள்.
 6. உங்களுக்கு முன்பின் தெரியாதவரிடம் நீங்கள் பேசுவது போல் கனவு வந்தால் நீங்கள் மற்றவர்களால் உயர்ந்த நிலையை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
 7. அழகான பெண் உங்கள் கனவில் வந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படப் போகிறது என்பதைக் குறிக்கும்.
 8. ஆசிரியர் கனவில் வருவது உங்கள் வாழ்க்கையில் வளங்கள் அமோகமாகப் பெருக போவதன் அறிகுறியாகும்.
 9. ஆசிரியருடன் பேசுவது போலவும், அவரை காண்பது போலவும் கனவு வந்தால் நன்மை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
 10. அழகாக சிரித்து கொண்டே இருக்கும் குழந்தையை கனவில் காண்பது உங்களுக்கு பணவரவு உயர போவதன் அறிகுறியாகும்.
 11. உடன் பிறந்த சகோதரர் உங்கள் கனவில் வருவது உங்களுக்கு ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி தீரப்போகின்றது என்பதன் அறிகுறியாகும்.
 12. உடன் பிறந்த சகோதரியை நீங்கள் கனவில் கண்டால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்று பொருள்.
 13. தந்தையைக் கனவில் கண்டால் நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும் என்று பொருள்.
 14. தன்னை தானே அழகுபடுத்திகொள்வது போலக் கனவு வந்தால் செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்று பொருள்.
 15. நீங்கள் மட்டும் சாப்பிடுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
 16. நீங்கள் யாரிடமாவது அறிவுரை கூறுவது போல் கனவு கண்டால் நண்பர்களிம் மனக்கசப்பு தோன்றும் என்று பொருள்.
 17. நீங்கள் யாரையாவது அவமரியாதை செய்வது போல கனவு வந்தால் தடைபட்ட காரியங்கள் கைகூடி வரும்.
 18. நீங்கள் யாரிடமாவது கோபம் அடைவது போல் கனவு வந்தால் உங்களின் செய்யும் புது முயற்சி தோல்வி அடையப்போகிறது என்று அர்த்தம்.
 19. அழகான பெண் உங்களை நோக்கி வருவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்பட போகிறது என்று பொருள்.
 20. உங்களின் கனவில் மாமியார் வந்தால் பொறுமையாகவும், எச்சரிக்கையாகவும் எல்லாவற்றிலும் செயல்பட வேண்டும் என்று பொருள்.
 21. உங்களின் கனவில் மாமனார் வந்தால் உங்களை உற்சாகப்படுத்த ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்பதைக் குறிக்கும்.
 22. உங்கள் காதலனிடமோ அல்லது காதலியிடமோ காதலை சொல்வது போல கனவு வந்தால் உங்களின் வேலைகள் வெற்றிகரமாக முடிய போகிறது என்று அர்த்தம்.
 23. முன்னாள் மனைவி அல்லது முன்னாள் காதலியுடன் உடலுறவு கொள்வது போல கனவு கண்டால், அந்த உறவு முடிவு பெற போகின்றது என்று பொருள்.
 24. பெண் கர்ப்பம் ஆவது போல் கனவு கண்டால் வளர்ச்சி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
 25. முன்பின் தெரியாதவர்களிடம் உறவு கொள்வது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம்.
 26. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களுடன் உறவு கொள்வது போல் கனவு வந்தால் உங்களின் நட்புக்கு ஆபத்து வரபோகிறது என்று அர்த்தம்.
 27. முத்தம் கொடுப்பது போல் கனவு வந்தால் ஒரு பிரச்சனை வரப்போகின்றது என்று அர்த்தம்.
 28. ஆனால் அடிக்கடி பாலியல் சம்பந்தமான கனவு வந்தால் நீங்கள் ஆசைப்பட்டது எதுவுமே கிடைக்காது என்று பொருள்.

இவற்றையும் படிக்கலாமே

7 comments:

 1. I fall in love with a person. I propose to him manytimes in real life he didnot accept me.

  I had a dream today morning 5a.m I saw him in my dreams,in the dream also I propose him he said no and he didnot accept my love.

  What is the meaning for my dream?please reply me....
  I am in true and mad love with him.

  ReplyDelete
 2. En frnd iku baby born agura mari kanavu kandean athuku ena palan

  ReplyDelete
 3. Enaku rumba yearsave......my mama paiyan interacta proposal panura mathiri kanavu varuthu.....athuku reason ena

  ReplyDelete
 4. En sis ku marriage aagura maadhiri kanuvu vandhuchu adhuku enna palan

  ReplyDelete
 5. I got a dream that I divorced ma husband what is the meaning for this

  ReplyDelete
 6. Mapla veetla January month kalyanam panlam nu solranga apdinu en kitta amma solra mari kanavu kandal enna palan

  ReplyDelete
 7. Thangam kollai povathu police kanavu kandaal Palani enna pls reply

  ReplyDelete