-->

சிறுதானியங்கள், அவற்றின் வகைகள் மற்றும் பயன்கள்


சிறுதானியங்கள்

ஆதி காலத்தில் மனிதன்  முதன் முதலில் அரிசியை மூங்கில் மரத்திலிருந்து தான் கண்டுபிடித்தான். எனவே அதற்கு மூங்கிலரிசி என்று பெயரிட்டான். இதன் மூலம் நெற்பயிரைக் கண்டு பிடித்து அதற்குப் பல பெயர்களை சூட்டினான். பின்பு சிறுதானிய வகைகளையும் பயிறு வகைகளையும் ஒவ்வொன்றாக கண்டு பிடித்தான். சிறுதானியங்களை நவதானியங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
சிறுதானிய பயன்கள்

நம் முன்னோர்களால் அந்த காலத்தில் இருந்தே சாப்பிடப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தை பிடிப்பது சிறுதானியங்கள் தான். ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறைகளின் ராஜாவாக கருதப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் அரிசி சிறுதானியங்களின் வழிமரபு தான். இவை நெல்லை போன்றே வளர்க்கப்படும் தானிய வகையாகும்.

குறுகிய காலப் பயிர்

அரிசியின் அளவை விட சிறியதாக இருக்கும் சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். நெல் விளைவதற்கு அதிக நாட்கள் மற்றும் மழை தேவைப்படும். ஆனால் சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும், குறைவான நீர் வசதியிலும், மற்றும் சாதாரண மண் வளத்திலும் நன்கு செழித்து வளரும். சிறுதானியங்களில் பெரும்பாலானவை பயிரிடப்பட்டு மிக குறுகிய காலத்தில் அதாவது 65 நாட்களுக்குள் அறுவடைக்கு  வந்துவிடும்.

ஊட்டச்சத்தின் களஞ்சியம் சிறுதானியங்கள்

உலகின் பல நாடுகளில் பிரதான உணவாகக் இருக்கும் அரிசியில் கூட சத்துக்கள் குறைவாக உள்ளன. ஆனால் சிறுதானியங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சிறுதானியங்களை நாம் உணவாக எடுத்துகொள்ளும் போது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதனால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறைக்கப் பட்டு உடல் பருமன் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
சிறுதானியங்களின் வகைகள்

சிறுதானிய வகைகள்

4. வரகு  
6. கம்பு   

ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள அவற்றை கிளிக் செய்யவும்.

சிறுதானியங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

உடல் சரியாக இயங்குவதற்கு தேவையான பல வகையான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கும் இரும்புச்சத்து மற்றும் செம்பு ஆகியவை அதிக அளவில் சிறுதானியங்களில் உள்ளன. மேலும் சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. சிறுதானியங்களில் அதிக அளவு உள்ள இரும்புச்சத்து இரத்தசோகையைக் குணப்படுத்தும். சிறுதானியங்களில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது

சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை கோலான் புற்றுநோய் வளரும் அபாயத்தைக் குறைக்கிறது. லிக்னைன் எனப்படும் சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாறுகிறது. இவ்வாறு மாறும் லிக்னைன் மார்பகப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் 50% குறைக்கிறது.

தமனி கோளாறுகளைத் தடுக்கிறது

சிறுதானியங்கள் உடலில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவை குறைக்கிறது. சிறுதானியங்கள் இரத்தத் அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து, இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் வாதம், தமனி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைகிறது.

வைட்டமின் பி நிறைந்தது

சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் பிஆனது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் கிரகித்து அதனை ஆற்றலாக மாற்றுகிறது. வைட்டமின் பிஇரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது. இதனால் கொழுப்புகள் ஒன்று சேர்ந்து கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதும் தடுக்கப்படுகிறது.

எடையை குறைக்கும்

சிறுதானியங்கள் டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலம் பசியின்மையைக் குறைத்து சரியான எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. டிரிப்டோபான் உணவு செரிமானத்தை உடலில் மெதுவான வேகத்தில் நடத்துகிறது. சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளதால் அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தங்கள் உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுதானியங்களின் மருத்துவ நன்மைகள்

பசையம் அறவே இல்லை

காய்கறிகளை மட்டும் உண்ணும் சைவப் பிரியர்கள் மிகவும் விரும்பும் உணவு சிறுதானியங்களாகும். ஏனெனில் சிறுதானியங்களில் உள்ள அதிகப்படியான புரதச்சத்து தான் இதற்கு காரணம். தினமும் உடலுக்கு தேவைப்படும் புரதச்சத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறுதானியங்களில் அதிகமுள்ளது. இறைச்சி உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பிற ஆரோக்கியமில்லா பொருட்கள் சிறுதானியங்களில் இல்லை. சிறுதானியங்களில் இருக்கும் புரதக் கூட்டமைப்பு கோதுமையில் உள்ளது போன்றே இருக்கிறது. அதிகச் சத்துக்கள் உள்ள சிறுதானியங்களில் பசையம் (குளுட்டன் - Gluten) எனப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பசை போன்ற பொருள் இல்லை. பசையம் சிறுதானியங்களில் இல்லாத காரணத்தால் செரிமானத் தன்மையை அதிகரிக்கிறது.

பசையம் ஒவ்வாமை நோயைத் தடுக்கும்

பசையம் ஒவ்வாமை நோய் என்பது சிறுகுடலைச் சேதப்படுத்தும் ஒரு வகையான நோய் ஆகும். இந்நோய் ஏற்பட்டால் சிறுகுடல் பாதிக்கப்பட்டு உணவில் இருந்து ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. சிறுதானியங்களில் முற்றிலுமாகப் பசையம் (குளுட்டன்) என்ற பசையம் கிடையாது. சிறுதானியங்களை ஆரம்பத்திலிருந்தே சாப்பிட்டு வந்தால் இந்த நோய் ஏற்படுவதிலிருந்து நம்மைப் பாதுகாக்கலாம்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்

இதயத்தமனிகளில் உள்ள‌ உட்சுவரினை தளர்த்துவதற்கு சிறுதானியங்களில் உள்ள‌ மெக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான அளவை குறைக்கிறது.

நார்ச்சத்து நிறைந்தது

சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. சிறுதானியங்களில் மலமிளக்கி பண்புகள் மலச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றன. சிறுதானியங்களில் உள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் கல்லீரலில் இருந்து தேவையற்ற கொழுப்பை வெளியேற்ற உதவுகின்றன.
நார்ச்சத்து அதிகமுள்ள உணவினை சாப்பிடுவதன் மூலம் பித்தப்பையில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. சிறுதானியங்கள் எளிதில் கரையாத நார்ச்சத்தை அதிகமாக்குகிறது, மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமான பித்த அமிலங்களின் சுரப்பைக் குறைக்கிறது.

தசைகள் சேதமடைவதை குறைக்கிறது

சிறுதானியங்கள் அதிகப் புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தசைகள் சேதமடைவதை குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது. எனவே சிறுதானியங்கள் தசைகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

சிறுதானியங்களில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதால் செரிமானம் மெதுவாக நடைபெறுகின்றது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுபாட்டில் வைத்து கொள்ள முடியும். இதனால் டைப்-2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

நிம்மதியான தூக்கம் தரும்

சிறுதானியங்களில் உள்ள டிரிப்டோபேன் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் செரோபோனின் அளவை அதிகப்படுத்துகிறது. சிறுதானியங்களால் செய்யப்படும் கஞ்சியினைக் தினமும் இரவு குடித்து வந்தால் அமைதியான தூக்கத்தினைப் பெற முடியும். தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இரவில் சிறுதானியங்களை சாப்பிடலாம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சிறுதானியங்களை நாம் உண்டு ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.
Previous Post Next Post