-->

உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்

உணவு கனவு பலன்கள்

உணவு பொருட்கள் கனவில் வந்தால்

 1. பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது போல கனவு வந்தால் பொருள் வரவு உண்டாகும்.
 2. விருந்தில் உண்பது போல் கனவு கண்டால் திருமண தடை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும்.
 3. இறைச்சி சாப்பிடுவது போல கனவு கண்டால் வியாதிகள் ஏற்படும் என்று பொருள்.
 4. மீன் இறந்து கிடப்பது போன்றோ கருவாட்டையோ கனவில் கண்டால் பகைவர்களின் தொல்லை ஏற்படும்.
 5. அரிசி சாதத்தை சாப்பிடுவது போல கனவு கண்டால் வியாதிகள் ஏற்படும் என்று அர்த்தம்.
 6. அரிசியைக் கனவில் கண்டால், செய்யும் தொழில் அபிவிருத்தி அடையும்; லாபம் அதிகரிக்கும்                          
 7. காரமான பொருட்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் உங்கள் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கிடைக்கும் என்று பொருள்.
 8. டீ குடிப்பது போல கனவு கண்டால் பிரிந்த நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று பொருள்.
 9. காப்பி குடிப்பது போல கனவு கண்டால் சுப செய்தி வரபோகிறது என்று அர்த்தம்.
 10. கோதுமை, அரிசி இவைகளை கனவில் கண்டால் செல்வ விருத்தி ஏற்படும் என்று அர்த்தம்.
 11. கோழி முட்டையை கனவில் கண்டால் தொழில் மற்றும் விருத்தி ஏற்படும் என்று அர்த்தம்.
 12. முட்டை சாப்பிடுவது போல் கனவு வந்தால் வறுமை உண்டாகும்.
 13. உப்பை கனவில் கண்டால் பணம், பொருள் நிறைய சேர போகிறது என்று அர்த்தம்.
  கனவில் சாப்பாடு வந்தால்
 14. வெல்லம் தின்பது போல கனவு கண்டால் வீட்டில் வறுமை உண்டாகும்.
 15. தயிர் சாப்பிடுவது போல கனவு கண்டால் வீட்டில் லக்ஷ்மி கடாஷம் உண்டாக போகிறது என்று பொருள்.
 16. பருப்புகளை கனவில் கண்டால் பகைவர்கள் உங்களை விட்டு விலகி ஓடுவார்கள் என்று அர்த்தம்.
 17. புளிப்பான உணவுகளை சாப்பிடுவது போல கனவு கண்டால் நம்மை பிடித்த துன்பங்கள் விலகும் என்று அர்த்தம்.
 18. பட்டாணியை கனவில் காண்பது வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெற போவதன் அறிகுறியாகும்.
 19. ரொட்டி சாப்பிடுவது போல கனவு கண்டால் வீட்டில் வறுமை வந்து சேரும்.
 20. சூடான பொருட்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் நம்முடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற போகிறது என்று அர்த்தம்.
 21. ஜாம் சாப்பிடுவது போல கனவு கண்டால் நல்ல காரியங்கள் நடைபெற போவதன் அறிகுறியாகும்.
 22. பாயசம் சாப்பிடுவது போல கனவு கண்டால் நன்மைகள் பல உண்டு.
 23. பால் குடிப்பது போல கனவு கண்டால் செல்வம் சேரும்.
 24. இஞ்சியை கனவில் கண்டால், நோய்களால் பாதிப்பு ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
 25. இனிப்புகளை கனவில் கண்டால் மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
 26. ஏலக்காயைக் கனவில் கண்டால் பிறரால் மதிக்கப் பெறும் நிலையை அடைவீர்கள்.
 27. ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால், மிகுந்த  செல்வம் வந்து சேரும் என்று அர்த்தம்.

இவற்றையும் படிக்கலாமே

Previous Post Next Post