நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் - Expres Tamil

Header Ads

நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்


நடைபயிற்சி ஏன் செய்ய வேண்டும்?
நடைபயிற்சி செய்வது எப்படி

உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

நடைப்பயிற்சி, நம் உள் உறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அளித்து உடல் உறுப்புகளை சீராக செயல்பட உதவுகிறது.
நடைபயிற்சி மேற்கொள்வதால், இடுப்பளவு மற்றும் வயிற்று பகுதியில் உள்ள அதிகப்படியான சதைப் பகுதியை குறைக்க உதவுகிறது.
.
தினமும் நடைபயிற்சி செய்வதின் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன..
 நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தைத் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

 ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோபின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்
.
தொடர்ச்சியான நடைபயிற்சி, எலும்புகளையும், தசைகளையும் வலிமையாக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அடிக்கடி அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம்.

 உடல் எடையை மிகவும் எளிதில் குறைக்க உதவும் வழிகளுள் ஒன்று நடைப்பயிற்சி. ஒரு நாளில் ஒருவர் 30 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சியை மேற்கொண்டால், 150 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையில் மாற்றம் தெரியும்.

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
 • நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.
 • நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.
 • அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது.
 • முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.
 • அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது.
 • மூட்டுகளை இலகுவாக்குகிறது.
 • எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.
 • கால்களையும், உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது.
 • கொலஸ்ட்ரால்அளவைக் குறைக்கிறது.
 • மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
 • உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது.
 • நல்ல தூக்கம் வர உதவுகிறது.
 • கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.
 • உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும்
 • ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கப் பயன்படும்.
 • சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்
நடைபயிற்சியின்போது செய்ய கூடாதவை
 • ஒரு கையால் செல்போனில் பேசிக்கொண்டும், மறுகையை பாக்கெட்டில் சொருகிக்கொண்டும் உல்லாசமாக நடப்பதால் எந்தப் பயனும் இல்லை.
 • இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் வீசி, நிமிர்ந்த உடலுடன் (வி)வேகமாக நடைபோடுவதுதான் உண்மையான பயிற்சி.
 • .உடல் எடை குறைக்க நடைபோடுபவர்கள், நொறுக்குத்தீனிகளை கொறித்துக்கொண்டே சென்றால், நடப்பதில் எந்தப் பயனும் இல்லை
 • அதிகமாகப் பேசிக்கொண்டே நடப்பது நல்லதல்ல.
 • மேடு, பள்ளம் உள்ள இடத்தில நடைபயிற்சி மேற்கொள்ளகூடாது..
எவ்வாறு நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
நடைபயிற்சியின் முக்கியத்துவம்
 • நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவாறு (தரையை பார்க் காமல்) நடக்க வேண்டும்.
 • நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்திருக்க வேண்டும்..
 • கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு நடக்க வேண்டும்.
 • உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன் புறம் சாய்த்தவாறு நடக்க வேண்டும்.
 • ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.
 • நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல் களால் உடலை உந்தித் தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் நடக்க வேண்டும். 
 • இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர் வளி (Oxygen) அதிகமான அளவில் உட் செலுத்திக்கொள்ளுங்கள். 
 • நடக்கும்போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள் ளுங்கள்.
நடைபயிற்சி எப்போது செய்ய வேண்டும்
நடைபயிற்சியின் அவசியம்
 • அதிகாலையில் நடப்பது மிகவும் நல்லது.அந்த நேரத்தில் நடப்பதால் தூய்மையான காற்றினை நாம் சுவாசிக்க முடியும்.
 • .அதிகாலையில் நடக்க முடியாதவர்கள் இரவு உணவுக்கு பின் அரை மணி நேரம் நடக்கலாம்.
 • எக்காரணம் கொண்டும் வெறும் வயித்துல நடக்கக் கூடாது.
 • அதிகாலையில்  நடக்கிறவங்க, அதுக்கு முன்னாடி அரை லிட்டர் தண்ணீர் குடிச்சிட்டு நடக்க ஆரம்பிக்கலாம். 
 • உடற்பயிற்சி துவக்கமாக ஒரே வேகத்தில் சுமார் 5 நிமிடங்கள் நடந்து பின்னர் கைகால்களை நீட்டவும். இதன்மூலம் நரம்பு களில் ஏதும் சோர்வோ அல்லது வீக்கமோ ஏற்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம்.


1 comment:

 1. Hand and leg romba sappaiya iruku. .... How to get muscles in leg and hand

  ReplyDelete