-->

காட்டு விலங்குகள் கனவில் வந்தால் என்ன பலன்கனவில் காட்டு விலங்குகள் வந்தால்

காட்டு விலங்குகள் கனவில் வந்தால்

1.    ஒட்டகம் கனவில் வந்தால் நாம் மேற்கொள்ளும் பயணத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று பொருள்.
2.    ஓநாய்களை கனவில் காண்பது நல்லதல்ல. உறவினர் பகை ஏற்படும்.
3.    ஓநாய் ஊளையிடுவது போல கனவு வந்தால் துக்க செய்திகள் வரும். 
4.    காட்டு ஓநாய் உங்களை விரட்டினால் உறவினர்களால் பகை ஏற்படும் என்று பொருள்.
5.    நரி கனவில் வந்தால் எடுத்த காரியம் வெற்றி பெரும்.
6.    நரி ஊளையிடுவது போல கனவு வந்தால் நெருங்கிய உறவினர் இறந்து விடுவார் என்று அர்த்தம்.
கனவு பலன்கள் நரி

7.    நரியை கனவில் அழுவது நல்லதல்ல. அது குடும்பத்தில் பிரச்சனையை உருவாக்கும் என்று பொருள்.
8.    கரடி தேன் குடிப்பது போல் கனவு வந்தால் நல்ல செய்ததிகள் வரும்.
9.    கரடி துரத்துவது போல கனவு வந்தால் நல்லதல்ல.
10.  கரடியை கொல்வது போல் கனவு வந்தால் நம்மை நோக்கி கெடுதிகள் வரும் என்று பொருள்.
11.  கீரிப்பிள்ளையை கனவில் கண்டால் எதிர்பாராத இடத்தில இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
12.  கீரி பாம்பை கொல்வது போல கனவு வந்தால் பகை விலகும்.
13.  குரங்கு கனவில் வந்தால் விரோதிகளால் துன்பம் ஏற்படும் என்பதைக் பொருள்.
14.  சிங்கம் துரத்தி வருவது போல கனவு கண்டால், அரசாங்கத்தால் பிரச்சனைகள் ஏற்படும்.
கனவு பலன்கள் சிங்கம்
15.  சிங்கம் மேலே பாய்ந்து கடிப்பது போல கடிப்பது போல் கனவு வந்தால் எதிரிகளால் பிரச்னை வரும்.
16.  சிங்கம் நம்மை பார்த்து ஓடுவது போல கனவு கண்டால் பிரச்சனைகள் தீரும் என்று பொருள்.
17.  புலி கனவில் வந்தால் உறவினர் சந்திப்பு நிகழும் என்று பொருள்.
18.  புலி துரத்துவது போல கனவு வந்தால் உறவினர்கள் மூலம் பிரச்சனை வரும்.
19.  புலி மீது ஏறி அமர்ந்து வருவது போல கனவு வந்தால் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள்.
கனவு பலன்கள் புலி
20.  யானையை கனவில் வந்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
21.  யானை மீது உட்கார்ந்து வருவது போல கனவு கண்டால் எடுத்த முயற்சி வெற்றி அடையும் என்று பொருள்.
22.  யானை மாலை போடுவது போல கனவு கண்டால் பெரிய பதவி உங்களை தேடி வரும். செல்வாக்கும் உயரும்.
23.  யானை துரத்தி வருவது போல கனவு வந்தால், பழைய விஷயங்களால் மனச்சங்கடங்களும், புதியதாய் பிரச்சனைகளும் உண்டாகும்.
24.  யானை ஆசிர்வாதம் செய்வது போல கனவு கண்டால் நல்லது.
25.  யானை உங்களை துரத்துவது போல கனவு வந்தால் தெய்வ குற்றம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
கனவு பலன்கள் யானை
26.  யானை வீட்டு வாசலில் வந்து நிற்பது போல கனவு வந்தாலும், நாம் யானைக்கு உணவு அளிப்பது போல கனவு வந்தாலும் நன்மைகள் நடக்கும்.
27.  குதிரையை கனவில் கண்டால் அரசு வேலை கிடைக்கும் என்று அர்த்தம்.
28.  குதிரை பந்தயத்தில் ஓடி வெற்றி பெறுவது போல கனவு வந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும்.
29.  குதிரை வேகமாக ஓடுவது போல கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று அர்த்தம்.
30.  குதிரை உதிப்பது போல கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் கெடும்.
31.  குதிரை விரட்டுவது போல கனவு வந்தால் புதிதாக பிரச்சினைகள் ஏற்படும்.
கனவு பலன்கள் குதிரை
32.  காண்டாமிருகம் கனவில் வந்தால் சோர்வு நீங்கி உடல் பலம் பெரும்.
33.  மானை கனவில் கண்டால் எதிரிகள் தொல்லை விலகும் என்று அர்த்தம்.
34.  மானை வேட்டையாடுவது போல கனவு வந்தால் பொருள் சேதம் ஏற்படும்.

இவற்றையும் படிக்கலாமே


Previous Post Next Post