-->
காய்கறிகள் கனவில் வந்தால்
- வெங்காயத்தை உரிப்பது போல கனவு கண்டால்
தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்று அர்த்தம்.
- வெங்காயத்தை சாப்பிடுவது போல கனவு கண்டால்
நல்லது நடக்க போகிறது என்று அர்த்தம்.
- முள்ளங்கியை கனவில் கண்டால் செல்வ வளம்
உண்டாகும்.
- முட்டை கோசை கனவில் கண்டால் உடல் வலுபெறும்
என்று அர்த்தம்.
- கிழங்கு வகைகளை கனவில் கண்டால் உடல் நலம்
மேன்மை அடையும் என்று அர்த்தம்.
- கிழங்கு வகைகளை சாப்பிடுவது போல கனவு
கண்டால் நடப்பை அனைத்தும் நன்மையாகவே நடக்கும் என்று பொருள்.
- அவரை காயை கனவில் கண்டால் நல்ல பலன்கள்
ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- அவரை பூவை கனவில் கண்டாலும் நல்ல பலன்களே
ஏற்படும்.
- அவரை கையை சாப்பிடுவது போல கனவு கண்டால்
நோய்கள் ஏற்பட போகிறது என்று பொருள்.
- பட்டாணியை கனவில் கண்டால் மங்கள காரியங்கள்
நடக்க போகிறது என்று அர்த்தம்.
- ஏலக்காயை கனவில் கண்டால் மற்றவர் மதிக்கும்
வண்ணம் சம்பவங்கள் நடைபெறும்.
- ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால்
நிறைந்த செல்வம் சேரும் என்று அர்த்தம்.
- காய்கறிகளை பறிப்பது போல கனவு கண்டால்
சண்டை சச்சரவுகள் உண்டாகும்.
- காய்கறிகளை சமைப்பது போல கனவு கண்டால்
ஒருசிலரால் நம்பி ஏமாறும் சூழ்நிலை ஏற்படும் என்று பொருள்.
- காய்கறிகளை சாப்பிடுவது போல கனவு கண்டால்
பொருள் இழப்பு ஏற்படும் என்று பொருள், அதலால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- பச்சைப் பூசணிகாயை
கனவில் கண்பது நோய் வருவதன் அறிகுறியாகும்.
- மஞ்சள் பூசணிகாயை கனவு கண்டால் வாழ்வில்
மகிழ்ச்சி ஏற்படும் என்று அர்த்தம்.
- புடலங்காய் தொங்குவது
போல கனவு கண்டால் நம் உடல் நோய்வாய்பட போகிறது என்று அர்த்தம்
- கொத்தவரக்காயை
கனவில் கண்டால் சண்டை,
சச்சரவுகள் ஏற்படும்.
- பிரச்னை
தோன்றும்.
- கொடி வகை
காய்கறிகளை கனவில் கண்டால் வாரிசு உருவாக் போகிறது என்று அர்த்தம்.
- தர்பூசணியை
கனவில் கண்டால் தொழிலில் லாபம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- திருஷ்டி பூசணிக்காயை
கனவில் கண்டால் தொழிலி நஷ்டம் ஏற்படும் கவனமாக இருக்கவும்.
- கல்யாண பூசணியை
கனவில் கண்டால் மங்கள காரியங்கள் நடைபெற போவதன் அறிகுறியாகும்.
பழங்களை கனவில் கண்டால்
- பொதுவாக பழங்களை கனவில் கண்டால் நல்ல விஷயங்கள் தடை ஏதும்
இல்லாமல் நடக்கும்.
- நீங்கள் பழங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது போல கனவு கண்டால்
உங்களின் சந்தோஷத்தை பங்கு போட ஒருவர் வரபோகிறார் என்று அர்த்தம்.
- பழங்களை நறுக்குவது போல் கனவு கண்டால், மனதில் இருந்த தேவையற்ற குழப்பங்களும்,
பிரச்சனைகளும் விலகும்.
- ஆரஞ்சு பழத்தை கனவில் கண்டால் எதிர்பாராத பொருள் இழப்பு
ஏற்படும்.
- நாவல் பழத்தை கனவில் கண்டால், காரிய சித்தி உண்டாகும். பணம், புகழ், செல்வம், செல்வாக்கு உயரும்.
- இஞ்சியை கனவில் கண்டால், நோய்களால் பாதிப்பு உண்டாகும்
என்று பொருள்.
- இனிப்புகளை கனவில் கண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்.
- ஏலக்காயை கனவில் கண்டால் வெளிவட்டாரத்தில் நம்முடைய மதிப்பு
அதிகரிக்கும்.
- ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால் செல்வம் வந்து சேரப்போவதன்
அறிகுறியாகும்.
- காய்கறிகளைப் மரத்திலோ, செடியிலோ பறிப்பது போல கனவு கண்டால் சண்டை
சச்சரவுகள் ஏற்படும்.