-->

மீன் பஜ்ஜி செய்வது எப்படி



மீன் ரோஸ்ட் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்
  • முள் நீக்கிய மீன் – ½ கிலோ
  • மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன் 
  • அரிசி மாவு - 1 ஸ்பூன் 
  • சோள மாவு – 2 ஸ்பூன் 
  • மைதா மாவு – 2 ஸ்பூன் 
  • எண்ணெய்  - தேவையான அளவு  
  • உப்பு  - தேவையான அளவு  
  • எலுமிச்சை பழச் சாறு  - சிறிதளவு   
செய்முறை

  • முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி முள் நீக்கி எடுத்து கொள்ளவும்.
  • பின்னர் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு,அத்துடன்  மிளகாய்த் தூள்,சிறிதளவு உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
  • சுத்தம் செய்து வைத்துள்ள மீனுடன் எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்துள்ள மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
  • சுவையான மீன் பஜ்ஜி ரெடி.
Previous Post Next Post