-->

மங்களம் தரும் கேதார கௌரி விரதத்தின் சிறப்புகளும் அதன் நன்மைகளும்

கேதார கௌரி விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்


கேதார கௌரி விரதத்தின் நன்மைகள்

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும்.

இவ்விரததிர்க்கு ஏன் கேதார கௌரி என்று பெயர் வந்தது என்றால் கேதாரம் என்ற சொல்லுக்கு இமயமலைப் பகுதியைச் சார்ந்த வயல் பகுதி என்று பொருள். கௌரி எனப் போற்றப்படும் பார்வதி தாய் கேதாரப் பகுதியில் அருள்புரியும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்ததால் இதற்க்கு கேதார கௌரி விரதம் என்று பெயர் வந்தது.

இந்த விரதத்தை ஆண்,பெண் இருபாலரும் கடைபிடிக்கவேண்டியது முக்கியமாகும். திருமணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல கணவன் அமைய வேண்டி இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். நல்ல மனைவி அமைய வேண்டி ஆண்களும் இவ்விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி அமாவாசை அன்று கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இவ்விரதத்தின் போது இறைவனுக்கு பிரசாதமாக பச்சரிசி மாவு, வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் அதிரசம் நெய்வேதியமாக படைக்கபடுகிறது.
வழிபாட்டின்போது நோன்புக் கயிறு வைத்து வழிபடுவது வழக்கம். நோன்பு முடிந்த பின்பு வீட்டில் உள்ள எல்லோருக்கும் நோன்பு கயிறு கட்டபடுகிறது. 


கேதார கௌரி கடைபிடிக்கும் வழிமுறைகள்

கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கும் முறை
  • விரதம் ஆரம்பிக்கும் நாளில் ஆலயத்திற்கு சென்று அம்பாளை வழிபட்டு பெயர், நட்சத்திரம் ஆகியவற்றை கூறி அனைவரது நன்மைகளையும் வேண்டி ஸ்ரீ வரசித்தி விநாயகரை வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
  • விரத நாட்களில் பகலில் தூங்குவது, உணவு போன்றவற்றை தவிர்த்து விரதம் மேற்கொள்ள வேண்டும். கௌரியை போற்றும் பாடல்களை பாடி அம்பிகையை வழிபட வேண்டும்.
  •  21 நாள்கள் கொண்டாடாமல் கடைசி நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் மொத்தமாக 21 அதிரசங்கள், 21 வெற்றிலை, 21 பாக்கு, 21 மஞ்சள், 21 மங்கலப் பொருள்கள் என நெய்வேதியமாக படைத்தது வழிபடுவார்கள். 
  • நோன்பிற்கு வரும் அனைத்து பெண்களுக்கும் சிறிய கண்ணாடி, மரத்தால் ஆன சொப்புச் சாமான்கள், கருக மணி, காதோலை, மருதாணி, மஞ்சள், குங்குமம் போன்ற 21 மங்கள பொருள்களை வைத்து வணங்கி, அ3தை பெண்களுக்கு வழங்குவார்கள்.
  • மங்களம் தரும் கேதார கௌரி விரதம் மேற்கொள்வதின் மூலம் எல்லா செல்வ வளமும் பெற்று அந்த சிவசக்தியின் அருளை பெறுவோமாக.



Previous Post Next Post