-->

வாழ்க்கையில் முன்னேற உதவும் வாஸ்து சாஸ்திர குறிப்புகள்

வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேற உதவும் சில வழிமுறைகள்  

வாஸ்துவால் ஏற்படும் மாற்றங்கள்

  • நம் வீட்டினை வாரம் ஒரு முறை உப்புத்தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும்.
  • வீட்டின் கீழ் நிலை, மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் 3 மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்..
  • நாம் வசிக்கும் வீட்டிற்கு எதிரில் குப்பைத் தொட்டி அல்லது குப்பை சேர்த்து வைப்பதோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • நமது வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் வீட்டின் வெளிப்புறங்களில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பீரோவில் பணம்,நகை வைக்கும் அறையில் ஒரு சிறு மஞ்சள் துண்டு வைக்கவும்.நமது செல்வ நிலை தாழ்ந்து விடாமல் இருக்க இது முக்கியமான ஒன்றாகும்..
  • பாறைகளின் மேல் நமது வீட்டின் குடியிருப்பு கட்டிடம் கட்டபடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.அது போன்று ஏரி,குளங்களில் வீடு கட்டுவதும் நன்மை தராது.
  • கோயில் சொத்துக்கள், கோயில் இடங்கள், போன தலைமுறையில் மற்றும் முன் காலங்களில் அது கோயில் இடமாக இருந்தாலும் அந்த இடங்களில் கட்டாயமாக குடியிருப்பு அமைக்கக் கூடாது.
  • தார் சாலைக்கு தாழ்வாக உள்ள இடத்தில வீடு அமையாமல் இருப்பது நல்லது.வீட்டின் வடகிழக்கு பகுதியின் மீது மரங்கள், செடிகொடிகளின்  நிழல் விழக்கூடாது.
  • அரச மரம், ஆல மரம், புளிய மரம், நாவல் மரம், நெல்லி, எருக்கு, பனைமரங்கள், மூங்கில் மரங்கள், கற்றாளை, காட்டு மரங்கள், அசோக மரம், புங்கை, எலுமிச்சை, வில்வம், போன்ற மரங்களை வீட்டில் வைக்காமல் இருப்பது மேன்மையை தரும்.
  • ஏரி, குளம், ஆறு, கால்வாய் ஆகியவை ஓரிரு வீதிகள் தள்ளி நமது இல்லம் அமையபெற்றிப்பது நன்மையை தரும்.
  • துளசிமாடம் வைத்து வழிபடுவோர் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு திசையில் வைத்து வழிபடுவது நல்லது..
  • வீட்டிற்குள் மிதியடிகள் போட்டு நடக்கக்கூடாது.
  • கண்ணாடி மணிகள் (Crystal) வீட்டின் முன்பு தொங்க விடுவதை தவிர்க்கலாம்.
  • பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பதை தவிர்க்கலாம்.
  • மாய மந்திரம் செய்பவர்களை நம் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது.
  • வீட்டில் உள்ள அறைகளை இருட்டாக வைத்திருக்க கூடாது.
  • முன்னோர் படங்கள் வரவேற்பு அறையின் வடக்கு பார்த்து வைத்துக் கொள்வது நல்லது..
  • கிரஹ பிரவேச நாள் அந்த வீட்டில் தங்க வேண்டும். ராஜநிலை தலைவாசலில் ஆனி, இரும்பு சம்மந்தப்பட்ட விஷயங்கள் வரக்கூடாது.
  • தலைவாசல் கதவு தேக்கு மரத்தில் அமைப்பது தேக்கம் என்று பொருள்படும். அதனால் தலைவாசலுக்கு தேக்கு மரம் தவிர்க்கப்பட வேண்டும்.
  • கண்டிப்பாக தலைவாயில் மரம் நமது இந்திய மரமாக பலம் வாய்ந்த மரமாகவும், நமது செல்வ நிலையை உயர்த்தக் கூடிய மரமாகவும், எடை குறைந்த மரமாகவும் அமைய வேண்டும்.
  • வீட்டின் பிரதான படுக்கைஅறை தெற்குதிசையில் அமைந்திருக்க வேண்டும், அது வடக்கு நோக்கி இருந்தால் குடும்பத்தில் அமைதியின்மை அதிகரிக்கும்.
  • படுக்கையறையில் உணவு அருந்த கூடாது, அவ்வாறு செய்தால் உடல்நல குறையும். 
  • செல்வம் மற்றும் பணம் ஆகியவை வடக்கு திசையில் வைக்க வேண்டும், அதாவது நீங்கள் பணம் வைத்து எடுக்குமிடம் வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.
  • சாப்பிடும் அறை சனிபகவான் ஆட்சி செய்யும் மேற்கு நோக்கி இருக்க வேண்டும்,மேலும் அது பசி கடவுளான  பகாசுரன் வழி ஆகும்.
  • ஒரு வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அந்த இல்லத்தில் ஜீவ காருண்யம் இருக்காது என்பது உண்மை. அதை வைத்து அந்த இல்லம் சரியான வாஸ்து அமைப்பில் இல்லை என்று உணரலாம்.
  • படுக்கை அறையில் கண்ணாடி உபயோகப்படுத்த வேண்டாம்.
  • எக்காரணம் கொண்டும் ஒரு வீட்டின் ஒரு முனையை ஒடித்து கட்டிடம் கட்ட வேண்டாம். ஏன் என்று சொன்னால் ஒவ்வொரு முனையும் நமது வீட்டின் உள்ளவர்களுடன் தொடர்புள்ளது.
  • நமது வடக்கு கிழக்கும் நமது வாய் மற்றும் மூக்கிற்கு இணையானது. இது எப்பொழுதும் போதுமான அளவு திறந்திருக்க வேண்டும்.எப்பொழுதும் திறந்திருக்க வேண்டும். அது போல வடக்கும் கிழக்கும் சகல செல்வங்களும் வரும் வழியாகும்.அடைப்புகள் இல்லாமல் இருப்பது செல்வ நிலையை உயர்த்த உறுதுணையாக இருக்கும்.
  • தெற்கும் மேற்கும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க உதவும் வழிகள் போன்றது. தேவையில்லாமல் அதிக திறப்புக்கள் இருக்கக் கூடாது. தேவையில்லாமல் திறந்து வைக்கக் கூடாது. தெற்கும் மேற்கும் வீட்டிற்கு தேவையில்லாத சங்கடங்கள் வரும்வழி, திறந்திருந்தால் உடனடியாக மூடி வையுங்கள். அதிகமாக திறந்தால் அது ஆபத்து.

Previous Post Next Post