-->

தினை அரிசியின் பயன்கள் மற்றும் நன்மைகள்


தினை

தினை ஒரு முக்கியமான சிறுதானிய பயிராகும். தினை உலகாதிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. தினைக்கு ‘சைனீஸ் மில்லட்’, ‘ஜெர்மன் மில்லட்’, ‘ஹங்கேரியன் மில்லட்’ என்று பல வகையாக பிரிக்கிறார்கள். தினைக்கு ஆங்கிலத்தில் பாக்ஸ் டெயில் மில்லட் (Fox Tail Millet) என்று பெயர். கதிரோடு இருக்கும் தினையை பார்க்கும்போது அது நரியின் வால் போல் தெரிவதால் ஆங்கிலேயர்கள் அந்த பெயரை வைத்துவிட்டார்கள்.

தினை அரிசியின் நன்மைகள்

தினையின் வரலாறு

பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். கி.மு.6,000 கால வாக்கில் சீனாவில் பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. தினை உற்பத்தியில் உலகில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படும் தானியம் தினை தான். தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. தினைக்கு தமிழிலில் ‘இறடி, ஏளல், கங்கு’ என்ற வேறு சில பெயர்களும் உண்டு.

தினை அரிசியில் உள்ள சத்துக்கள்

தினை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற மேலும் பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

தினையின் ஆரோக்கிய நன்மைகள்

தினை அரிசி, சிறு தானிய வகைகளில் மிக முக்கியமான ஒன்று. இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை பின்வரும் பகுதியில் காண்போம்.

நார்ச்சத்து மிகுந்தது

தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தினமும் ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.

நீரிழிவு நோயை கட்டுபடுத்தும்

அரிசி உணவுகள் அதிகம் சாப்பிட்டால் நீரிழவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சர்க்கரை சத்து அதிகம் உள்ள அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும். மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.

மன அழுத்தம் போக்கும்

அதிகமான கோபம், கவலை போன்ற உணர்வுகள் நமது உடல் மற்றும் மனதில் சில பாதிப்புகளை உருவாக்கி மன அழுத்தத்ததை உருவாக்குகிறது. தினை தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் உள்ளன. எனவே தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மன அழுத்த பிரச்சனைகளை தீர்க்கும்.

எலும்புகள் வலுவடையும்

தினை அரிசியில் கால்சியம் சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையடையும்.

புரதச்சத்து நிறைந்தது

உடலில் உள்ள தசைகளின் வலுவிற்கும், சருமத்தின் மென்மைக்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். தினை அரிசி புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவாகும். தினை அரிசியை கொண்டு செய்யபட்ட உணவுகளை சாப்பிட்டு வருவதால் உடலின் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோலின் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும்.

பார்வை தெளிவடையும்

தினை அரிசியில் கண்களுக்கு நன்மையளிக்கும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனால் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். இதனால் பார்வை தெளிவடையும்.

தினை சிறுதானியம்


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தினையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இது உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

ஆண்மை குறைபாடு சரியாகும்

திருமணமான ஆண்கள் சிலருக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு குழந்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தினையை அரிசியை மாவாக இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து, களி போல செய்து சாப்பிட்டு வந்தால் உடலின் நரம்புகள் முறுக்கேறும். உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.

உடல் எடையை அதிகரிக்காமல் பாதுகாக்கும்

தினை அரிசி புரதசத்து அதிகம் கொண்டது. அதே நேரத்தில், கொழுப்பு சத்து அறவே இல்லாதது. தினையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிக்காமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.

இவ்வளவு நன்மைகளை கொண்ட தினை அரிசியை சாப்பிட்டு வந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்.

Previous Post Next Post