-->

நகைச்சுவை நடிகர் செந்திலை பற்றிய சில சுவாரசிய விஷயங்கள்

செந்தில் காமெடி

செந்தில்
செந்தில் இந்த பெயரை கேட்டலே சிரிப்புதான் நினைவுக்கு வரும். செந்திலின் பிறந்த நாள் இன்று. இந்த கட்டுரையில் செந்திலை பற்றிய சில சுவாரசிய செய்திகளை பார்ப்போம். செந்திலின் சொந்த ஊர் ராமநாதபுரம். செந்தில் தன்னுடைய சிறு வயதில் அவரது தந்தையுடன் ஏற்பட்ட மனகசப்பினால் சொந்த ஊரிலிருந்து கிளம்பி, சென்னைக்கு வந்துவிட்டார்.
வேலை
ஆரம்பத்தில் சென்னையில் எண்ணெய்க் கிடங்கு, பார் என பல இடங்களில் வேலை செய்துள்ளார். செந்திலுக்கு சினிமாவின் மீது ஈர்ப்பு அதிகம். அதனால் பல நாடகங்களில் நடித்து கொண்டும் இருந்தார். செந்தில் நடிக்க வரும்போதே அவருக்கு வயது 28. இதற்கு நடுவில் இவரது வீட்டில் இவரைத் திரும்ப வரச் சொல்லி சமாதானம் செய்துள்ளனர். ஆனால் அவர் விடாபிடியாக ஊருக்கு செல்ல மறுத்துவிட்டார்.
முதல் படம்
செந்திலில் முதலில் அறிமுகமான படம் 'பசி'. அந்தப் படத்தில் ஒரு சிறு வேடம்தான் கிடைத்தது. பசி படத்துக்கு பின் சில படங்களில் சிறு வேடங்களில் தலைகாட்டினார். பாக்கியராஜின் தூறல் நின்னு போச்சுபடத்தில் நம்பியாரின் வேலையாளாக நடித்து இருப்பார். அந்த படம் தான் செந்திலுக்கு டர்னிங் பாயிண்ட்.
செந்தில் வாழ்க்கை குறிப்பு

முயற்சி
ஆரம்ப காலப் பாடங்களில், பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அவ்வவ்போது சில படங்களில் சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தார் செந்தில். ஐந்து வருடங்களாக தொடர்ந்து விடாமுயற்சியோடு சினிமாவில் முயற்சி செய்துகொண்டே இருந்தார். பல கட்ட முயற்சிக்கு பின் சினிமாவில் பெரிய இடத்துக்கு உயர்ந்தார்.
ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் எனப் பல நட்சத்திர நடிகர்களோடும் நடித்து விட்டார். கவுண்டமணியோடு அவர் அடிக்கும் லூட்டிகளை எப்போது பார்த்தாலும் சிரிப்பை வரவழைத்து விடும். செந்தில், கவுண்டமணி காமெடிக்காகவே ஓடிய படங்களும் உண்டு. இந்த கூட்டணி படத்தின் ஹீரோக்களைவிட தங்களது நகைச்சுவைகளின் மூலம் ரசிகர்களை வெகுவாக கட்டியிழுத்தனர்.
பலம்
செந்திலின் மிக பெரிய பலம் அவருடைய குழந்தைத்தனமான முகம்தான். அவர் முகத்தை பார்த்தாலே மக்களுக்கு சிரிப்பை வரவழைத்து விடும். செந்தில் அவர் முகத்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் சேட்டைகள், வசனங்களை அவர் வெளிப்படுத்தும் முறைகளால் எப்படிப்பட்டவரையும் சிரிக்க வைத்து விடுவார். அவரின் பிறந்தநாளான இன்று நாமும் அவரை வாழ்த்துவோம்.


Previous Post Next Post