-->

வெயிலில் இருந்து உங்கள் அழகான முகத்தை பாதுகாக்கனுமா? அப்போ இத உடனே செய்யுங்க.




ஆரஞ்சு பழம் ஒருவரது அழகை மேம்படுத்த உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், ஆரஞ்சு பழம் ஒருவரது சரும நிறத்தை அதிகரிப்பதோடு முக பொலிவையும், அழகிய தோற்றத்தைப் பெற உதவுகிறது.ஆரஞ்சு பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மட்டுமின்றி, சில முக்கியமான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எறியும் ஆரஞ்சு பழ தோலும் வெயிலால் வரும் சரும பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.ஆரஞ்சு பழங்களைக் கொண்டு கிளின்சிங், ஃபேஸ் மாஸ்க், ஃபேஷியல், ஸ்கரப் என்று பலவாறு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இப்படி செய்தால், சரும பிரச்சனைகளான கருமையான சருமம், சரும வறட்சி போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

முக்கியமாக ஆரஞ்சு விலைக் குறைவில் கிடைப்பதால், அனைவருமே எளிதில் வாங்கி உபயோகிக்க முடியும். ஆனால் ஆரஞ்சு பழங்களை அதற்கு சரியாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆரஞ்சு பழங்களை கொண்டு எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்


ஸ்டெப் 1: கிளின்சிங்
ஃபேஷியல் செய்வதற்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று தான் கிளின்சிங். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் தேவையில்லாத தூசிகள் போன்றவை நீங்கி, முகம் பளிச்சென்று காட்சியளிக்கும்.
தேவையான பொருட்கள்:
* ஆரஞ்சு தோல் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* பால் - 2-3 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர், 2-3 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் 2 நிமிடம் கழித்து நீரால் முகத்தைக் கழுவுங்கள்.


ஸ்டெப் 2: ஸ்கரப்பிங்
கிளின்சிங்கிற்கு அடுத்தப்படியாக செய்ய வேண்டியது ஸ்கரப்பிங் தான். ஸ்கரப் செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு, முகத்தின் ஒட்டுமொத்த தோற்றமும் மேம்பட்டு காணப்படும்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* ஆரஞ்சு எண்ணெய் - சில துளிகள்
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை பொடி, ஆரஞ்சு எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 5-6 நிமிடம் ஸ்கரப் செய்யுங்கள். இந்த செயல்முறையால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும். பின் 5 நிமிடம் கழித்து நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

ஸ்டெப் 3: ஃபேஸ் மாஸ்க்
கடைசியாக போட வேண்டியது தான் ஃபேஸ் மாஸ்க். இதனால் சருமத்திற்கு நீர்ச்சத்து கிடைத்து, ஒட்டுமொத்த முகமும் பிரகாசமாக காட்சியளிக்கும். இங்கு ஒருசில ஆரஞ்சு வகை ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.



வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு ஃபேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
* ஆரஞ்சு - 1
* வாழைப்பழம் – 1
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தை மசித்துப் போட்டு, அத்துடன் ஆரஞ்சு பழத்தின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவில 15-20 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். பின்பு சாதாரண நீரால் முகத்தைக் கழுவி, உலர்த்திய பின், மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள்.


கற்றாழை ஜெல் மற்றும் ஆரஞ்சு தோல் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* ஆரஞ்சு தோல் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - சில துளிகள்
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வையுங்கள். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்கில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். இந்த செயலை வாரத்திற்கு ஒருமுறை என 1-2 மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் முகத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்.




Previous Post Next Post