-->

செட்டிநாடு நண்டு குழம்பு - Chettinadu Crab Kuzhambu

செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

  1. நண்டு - ஒரு கிலோ
  2. சோம்பு - 2 தேக்கரண்டி
  3. பூண்டு - 5 பல்
  4. வெங்காயம் - 3
  5. நாட்டுத் தக்காளி - 4
  6. மிளகு - ஒரு தேக்கரண்டி
  7. சீரகம் - 2 தேக்கரண்டி
  8. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  9. மல்லித் தூள் - 3 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  11. உப்பு - தேவையான அளவு
  12. எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1.       நண்டை ஓடு நீக்கி நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவேண்டும்,

2.       வெங்காயம்,  தக்காளி,இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

3.       கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியை நன்கு வதக்கி பின்னர் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

4.       பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பிறகு நண்டை போட்டு மூடிவிட வேண்டும்.

5.      நண்டு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி.


Previous Post Next Post