-->

சிக்கன் ரிச் குருமா - Chicken Rich Kuruma

   


ருசியான சிக்கன் ரிச் குருமா

தேவையான பொருட்கள்:
  1.     கோழிக்கறி – 3/4 கிலோ,
  2.     பெரிய வெங்காயம் – 3
  3.     ஃப்ரஷ் க்ரீம் – 1/4 கப்
  4.     ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
  5.     உப்பு தேவையான அளவு
  6.     எண்ணெய் – 4 ஸ்பூன்
  7.     பிஸ்தா – 8
  8.     தயிர் – 1 கப்
  9.     கோவா – 1/2 கப் (சர்க்கரையில்லாதது)
  10.     மிளகு தூள் – 1 தேக்கரண்டி
  11.     பச்சை மிளகாய் – 3
  12.     இஞ்சி – 1 அங்குல துண்டு
  13.     பூண்டு – 8 பல்
  14.     பாதாம் – 8
  15.     மிளகு தூள் – 1 தேக்கரண்டி

 
செய்முறை:

1.  சிக்கனை 
 பெரிய துண்டுகளாக வெட்டிக் வைத்து கொள்ளவும்

2. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

3. பாதாம், பிஸ்தாவை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, நன்கு  அரைத்துக்கொள்ளவும்.

4. தயிரை 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.

5. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். பின், கோழித்துண்டுகள், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். 

6. கோவாவை 1 கப் வெந்நீரில் கரைத்து, பாதாம், பிஸ்தா அரைத்த கலவையுடன் சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.

 7
. நன்கு கொதித்த பின், உப்பு, மிளகு தூள், கலக்கிய தயிர் சேர்த்து கொதிக்க விடவும். சிக்கன் வெந்தவுடன் ஃப்ரஷ் க்ரீம், ஏலக்காய் தூள் சேர்த்து, 2 நிமிடம் விட்டு இறக்கினால் சுவையான சிக்கன் ரிச் குருமா ரெடி.



Previous Post Next Post