-->

பாலக் சிக்கன் - Paalak Chicken



வதக்கி அரைக்க தேவையானவை:
  1. சின்ன வெங்காயம் - 20 ( பொடியாக நறுக்கியது)
  2. வரமிளகாய் - 5
  3. சீரகம் - 1 டீஸ்பூன்
  4. வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
  5. எள் - 1 டீஸ்பூன்
  6. மிளகு - 1 டீஸ்பூன்
  7. மல்லித்தூள் - 3 டேபிள்ஸ்பூன்
  8. மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
  9. தேங்காய் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
  10. கறிவேப்பிலை - சிறிதளவு

தேவையானப் பொருட்கள்:

  1. சிக்கன் – 250 கி
  2. பாலக்கீரை – 1 கட்டு
  3. பெரிய வெங்காயம் – 1
  4. இஞ்சி பூண்டு விழுது – 20 கி
  5. பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
  6. எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
  8. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. தக்காளி – 1  ( பொடியாக நறுக்கியது)
  11. கெட்டி தயிர் – 200 கி


செய்முறை:

1.
சிக்கனை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும்  இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து லேசாக வதக்கவும்.

3. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதனுடன் பாலக் கீரையையும் சேர்த்து வதக்கவும்.

4. மேலும்  சிக்கனை போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.பிறகு தயிரை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

5. பின்  தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.பின் கரம் மசாலா மற்றும் உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.


Previous Post Next Post