-->

இறால் மேங்கோ கறி - Prawn Mango Kari


கேரளா ஸ்பெஷல் இறால் மங்கோ கறி

தேவையானவை பொருட்கள்:
  1. இறால் - 400 கிராம்
  2. தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
  3. அரை மூடி தேங்காய் - அரைத்து பால் எடுத்தது
  4. வெங்காயம் - 3 நறுக்கியது
  5. மஞ்சள் தூள் -1 / 2 டீஸ்பூன்
  6. பூண்டு -4 பல்
  7. இஞ்சி - சிறுதுண்டு
  8. உப்பு-தேவையான அளவு
  9. மாங்காய் -1 (துண்டாக்கி கொள்ளவும்)
  10. காய்ந்த மிளகாய் -2
  11. பச்சை மிளகாய் -2
  12. தனியா -1 டீஸ்பூன்
  13. சீரகம்- 1/2 டீஸ்பூன்
  14. (தனியா, சீரகம் இரண்டையும் வறுத்து அரைக்கவும்)


செய்முறை:

1.இறாலை சுத்தம் செய்து லேசாக உப்பு,மஞ்சள் தூள் தடவி வைக்கவும்.

2.ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து, காய்ந்தும் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.

3. அரைத்த மசாலாவை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.

4.இப்போது இறாலை சேர்க்கவும். பின் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.

5.மசாலாவுடன் சேர்ந்து இறாலும் வெந்து கெட்டியான பதத்தில் வந்ததும் இறக்கினால் சுவையான இறால் மேங்கோ கறி ரெடி.


இது சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.



Previous Post Next Post