-->

சாமி ஸ்கொயர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

சீயான் விக்ரமின் சாமி

சாமி - 2
இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் சாமி. விக்ரம்-ன் மிரட்டலான நடிப்பில் படம் மிக பெரிய வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் சாமி-2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடித்து வருகிறார்.

மேலும், பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். காரைக்குடி மற்றும் திருநெல்வேலியில் இதன் ஷூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது படத்தின்  முக்கால் சதவித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு வேடம்
இந்தப்படத்தில் போலீஸ் கமிஷனராக நடிக்கிறார் விக்ரம். மேலும் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். ஆறுச்சாமியாக முதல் பாகத்திலும்  இரண்டாம் பாகத்தில் மகன் ராமசாமியாகவும் நடிக்கிறாராம் விக்ரம்.

வில்லன்
அதேபோல் முதல் பாகத்தின் வில்லன் கோட்ட சீனிவசராவ்வின் மகனாக பாபி சிம்ஹா இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விரைவில் ரிலீஸாகும் என தெரிகிறது.  

ஃபர்ஸ்ட் லுக்

இந்நிலையில் சாமி ஸ்கொயர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வரும் 17ம் தேதி வெளியிடப்படும் என படகுழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post