சிசேரியன் செய்து கொண்ட பெண்களா நீங்க ?அப்போ கண்டிப்பா கவனிங்க... - Expres Tamil

Header Ads

சிசேரியன் செய்து கொண்ட பெண்களா நீங்க ?அப்போ கண்டிப்பா கவனிங்க...


பிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே கூறலாம்.எந்த முறையில் பிரசவித்திருந்தாலும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளும் பிரச்சனைகளும் பல இருக்கின்றன.இவை அனைத்தையும் மறைத்து ஒரு தாய் தன் குழந்தையிடம் மலர்ந்த முகத்துடன் காட்சியளிப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் பிரசவம் தான் நடைபெறுகிறது. பொதுவாக இந்த மாதிரியான பிரசவம், குழந்தை பிறக்கும் போது சிக்கல் ஏற்பட்டால், தான் நடைபெறும். மேலும் சில அனுபவமுள்ள பெண் களும் சிசேரியன் பிரசவத் தையே சிறந்ததாக சொல்கின்றனர்.

ஆனால் உண்மையில் சிசேரியன் பிரசவத்தின் போது அவ்வளவாக வலி தெரியாவிட்டாலும், அந்த மாதிரியான பிரசவத்திற்கு பின் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பக்கவிளைவு களைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை.

சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

 1. சிசேரியன் என்பது பெண்களின் உடலில் ஒரு பகுதியைக் கிழித்து, குழந்தையை வெளியே எடுக்கும் முறை. சிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆனால், அதன்பின் ஏற்படும் வலிகள் அதிகம்.
 2. சுகப்பிரசவத்தில் மூன்று முதல் ஐந்து நாட்களிலேயே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம்.ஆனால் சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தால் குறைந்தது ஐந்து மாதமாவது அவசியம் ஓய்வு எடுக்கவேண்டும்.
 3. ஆபரேசன் செய்து தையல் போட்ட இடத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் குறைந்தது ஆறு வாரத்துக்குக் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது, கீழே அடிக்கடி உட்கார்ந்து எழுவது. அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்குவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
 4. நிறைய பெண்களுக்குக் குழந்தைப் பேற்றுக்குப் பிறகு தங்கள் அழகு மற்றும் ஆரோக்கியத்தில் ஈடுபாடு போய்விடுகிறது. அவ்வாறு இல்லாமல் பிரசவத்திற்கு பிறகும் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பது நல்லது.
 5. ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாமல் இருப்பதனால், எடை அதிகரிப்பு ஏற்படும். இதனைத் தடுக்க, சிசேரியனுக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனையுடன் அடிவயிற்றுப் பகுதி தசைகளுக்கான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
 6. சிசேரியன் செய்தபின் பெண்களின் அடிவயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கு மூன்று மாதங்கள் தேவை. இந்தச் சமயத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால், காயம் அதிகமாவதுடன், கர்ப்பப்பை பிரச்னைகளும் வரலாம். 
 7. இந்த சமயத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.இதனால் உங்கள் உடலின் நீர்சேர்க்கை அதிகமாவதுடன்,மலச்சிக்கலும் தவிர்க்கலாம்.  
 8. வீட்டின் உள்ளேயே சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயங்கள் வேகமாக குணமடையும். 
 9. குளிக்கும் போது உங்கள் அறுவை சிகிச்சை தையல்களை கவனமாக கையாள வேண்டும்.
 10. சிசேரியன் நடந்த பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு தான். அப்படி உளைச்சல் ஏற்படும் போது, மருத்துவர் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.
 11. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, உங்கள் வயிற்றை சுற்றி சிசேரியன் பெல்ட் ஒன்றை சில மாதங்களுக்கு அணிவித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அசைவு கொடுப்பதால் உங்கள் தழும்பு திடீரென கிழியாமல் தடுக்க இந்த பெல்ட் பாதுகாப்பை அளிக்கும். 

No comments