அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு - Expres Tamil

Header Ads

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்புஅஸ்வினி நட்சத்திர பலன்கள்


அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரத்தின் ராசி : மேஷம்
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி
 : கேது
அஸ்வினி நட்சத்திரத்தின் ராசி அதிபதி :
 செவ்வாய்

அஸ்வினி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி ஞானகாரகன் என அழைக்கப்படும் கேது பகவான் என்பதால் ஒருவரை பார்த்தவுடன் அவரை எடை போடுவதில் வல்லவர்கள்.மனசாட்சிக்கு உட்பட்டு எல்லா காரியத்தையும் செய்வார்கள்.

இவர்களுக்கு தன்மானமும் சுய கௌரவமும் அதிகமாக இருக்கும். எதையும் சுயமாக சிந்தித்தே செயல்படுத்துவார்கள். பிடிவாத குணம் அதிகம் இருக்கும். துணிச்சலாகவும் அதே சமயம் தன்னம்பிக்கையுடனும் செயல்பட கூடியவர்கள்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்கள் முன் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். சில சமயங்களில் அவர்களின் சாமர்த்திய பேச்சால் மற்றவர்களிடம் அவர்களுக்குண்டான மதிப்பை பெற்றிடுவீர்கள். சேமித்து வாழ வேண்டும் என விரும்புவார்கள். அவர்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்துவார்கள்.

இவர்கள் தான, தருமம் செய்ய ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களிடம் பொய் பேசுவதை விரும்பமாட்டார்கள். வித விதமான ஆடை அணிகலன்களை அணிவதில் விருப்பம் உடையவராக இருப்பர். மிகுந்த புகழை உடையவர்கள். சிவந்த கண்களையும், அகன்ற மார்பையும் உடையவர்கள். உயர்ந்த நெற்றி உடையவர். அமைதியான சாத்வீக குணத்தை உடையவர்கள்.

அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் மன சஞ்சலம் உடையவர்களாக இருப்பார்கள். அழகாக இருக்க வேண்டும் என விரும்புவர்கள். எல்லோரிடமும் அன்பாக இருப்பார்கள்.

அஸ்வினி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

பிறரை எடை போடுவதில் வல்லவர்கள். மற்றவர்கள் பேசுவதை வைத்தே அவரின் மனோபாவங்களை அறிபவர்களாக இருப்பார்கள். இவர்கள் அழகானவர்கள். எல்லோருக்கும் நன்மை செய்பவர்களாக இருப்பார்கள். நல்ல அறிஞர் போன்ற பண்புகளை உடையவர்களாக இருப்பார்கள்.

அஸ்வினி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் கணிதத்தில் அதிக ஆர்வமுடையவரை இருப்பார்கள். நல்ல கூரிய அறிவு உடையவர்களாக இருப்பார்கள். நல்ல செயல்களையே நினைப்பவர்களாக இருப்பார்கள்.

அஸ்வினி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

உடம்பு சிறிது கூனி குறுகி இருக்கும். இவர்கள் மிகுந்த அறிவாளிகள். சகல கலைகளையும் அறிந்தவர்கள். இந்திரன் போல வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களிடம் காம உணர்ச்சி அதிகம் இருக்கும். எதற்கும் அஞ்சாதவர்கள்.

மற்ற ராசிகளின் பொதுவான குணங்களை இங்கே கிளிக் செய்வதன்மூலம் காணலாம்.


மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் 

No comments