-->

2 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

2 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்


2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இரண்டாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாதலால் சதா கற்பனை உலகில் சஞ்சாரம் செய்து கொண்டே இருப்பார்கள். சந்தேகமும், பயமும் இவர்களின் சுபாவமாக இருக்கும். பொய்யை கூட உண்மை போலப் பேசுவதில் வல்லவர்கள். வாய் சொல்லில் வீரர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு கலைத் சம்மந்தபட்ட துறைகள் அதிக நன்மை செய்யும். இவர்களால் எதிலும் தானாக முன்னுக்கு வர முடியாது. இவர்களுக்கு சரியான தூண்டுகோல் இருந்தால் எதிலும் பிரகாசிப்பார்கள். கூட்டு சேர்ந்து தான் செயல்படும் படியாக இருக்கும். எதிலும் அதிக முன்னெச்சரிக்கை உணர்வோடு இருப்பார்கள்.

நல்ல சிந்தனை, கற்பனை சக்தி கொண்டவர்கள். கதை, கட்டுரை, பாடல்கள், கவிதைகள், வரலாறுகள் போன்றவற்றில் ஆர்வம் இருக்கும். இவர்கள் மனம் சதா எதையாவது ஒன்றை யோசித்துக் கொண்டே இருக்கும். நிகழ் காலத்தில் இவர்கள் மனம் இருக்காது. எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள். சிறு துயரம் என்றாலும் கண் கலங்கி விடுவார்கள். பாசத்துக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்.

பெண்களிடம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் அவர்களால் இவர்களுக்கு அவப் பெயர் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டு விடும். இந்த எண்ணில் பிறக்கும் ஆண்களிடம் பெண்மைக்கு உண்டான குணமும், பெண்மைத் தனமும் கூட சேர்ந்தே இருக்கும்.

இவர்கள் பார்ப்பதற்கு அமைதியாக காட்சியளிப்பார்கள். ஆனால்  கோபம் என்று ஒன்று வந்து விட்டால் அவ்வளவு தான். கைக்கு கை, பல்லுக்கு பல் என பழி வாங்கும் கோவ குணம் இந்த எண்ணில் பிறந்த ஒரு சிலரிடம் இருக்கும். இவர்கள் சற்று குழப்பவாதிகளாக இருப்பார்கள். தான் குழம்புவது மட்டும் அல்லாமல் உடன் இருப்பவர்களையும் குழப்பி விடுவார்கள். இவர்களுக்கு தெய்வ நம்பிக்கை சற்று குறைவுதான்.

இவர்களுக்கு இரத்தக் கோளாறு, சரும நோய்கள், மாரடைப்பு, மூட்டு வலி, நீர் சம்மந்தமான வியாதிகள் அல்லது சர்க்கரை வியாதி கூட வரலாம். இவர்கள் புடத்தில் இட்ட தங்கம் போல பிரகாசிப்பார்கள். இவர்கள் என்ன தான் உழைத்தாலும் குடும்பத்திலும், சமூகத்திலும் நல்ல பெயர் கிடைப்பது மிகவும் அரிது.

மற்ற எண்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்
Previous Post Next Post