-->

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

பூரம் நட்சத்திரம் வாழ்க்கை முறை


பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : பூரம்
பூரம் நட்சத்திரத்தின் ராசி : சிம்மம்
பூரம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன்
பூரம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி :
 சூரியன்

பூரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகாக இருப்பார்கள். ஆடை, அணிகலன்களில் நேர்த்தியை விரும்புவார்கள். இவர்கள் மனது அலைபாய்ந்து கொண்டே இருக்கும். நல்ல அறிவாளிகள். மற்றவர்களை அனுசரித்து செல்வார்கள்.

இவர்களுக்கு கோபம் வந்துவிட்டால் அவ்வளவு எளிதில் சமாதானம் ஆக மாட்டார்கள். இவர்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகம் இருக்கும். எப்பொழுதும் கற்பனை உலகில் சஞ்சரித்து கொண்டு இருப்பார்கள்.
ஆடம்பர செலவுகள் அதிகம் செய்வார்கள்.

இவர்களுக்கு உழைப்பதில் ஆர்வம் அதிகம். பயணங்கள் செய்வதில் அதிக விருப்பம் உடையவர்கள். சேமிப்பதில் அதிக அக்கறை கொண்டவர்கள். அசட்டு தைரியம் இவர்களிடம் அதிகம் இருக்கும். செல்வாக்கோடு வாழ விரும்புவர்.

எல்லா கலைகளையும் கற்று வைத்திருப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். இசை, நடிப்பு இவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். தான தர்மங்கள் செய்ய ஆசைபடுவார்கள்.

பூரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் தைரியசாலிகள். இனிமையாக பேசுவதில் வல்லவர்கள். அதீத நினைவாற்றல் கொண்டவர்கள். எப்பாடுபட்டாவது தாங்கள் மேற்கொண்ட காரியங்களில் வெற்றி பெற விரும்புவார்கள். உடல் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்ள மாட்டார்கள்.

பூரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்களுக்கு நல்ல கல்வியறிவும், திறமையும் இருக்கும். தோல்வியை ஏற்று கொள்ளும் மன பக்குவம் இவர்களுக்கு குறைவு. எப்பொழுதும் பிறரை சார்ந்து வாழ்வார்கள். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்.

பூரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் நல்ல குணமுடையவர்களாக இருப்பார்கள். நுண் கலைகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு சுயநலம் அதிகம் இருக்கும். பிறரை பற்றி கவலை பட மாட்டார்கள்.

பூரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டு பிறகு வருத்தப்படுவார்கள். திட்டமிட்டபடி செயல்பட மாட்டார்கள். தெய்வ நம்பிக்கை உடையவர். இவர்களுக்கு நிர்வாக திறமை குறைவு.
Previous Post Next Post