-->

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

ரேவதி நட்சத்திரம் வாழ்க்கை முறை

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : ரேவதி
ரேவதி நட்சத்திரத்தின் ராசி : மீனம்
ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி : புதன்
ரேவதி நட்சத்திரத்தின் ராசி அதிபதி : குரு

ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

இவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லாருக்கும் நன்மை செய்ய நினைப்பார்கள். தன்னுடைய அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக சொல்லி எப்படி வாழ வேண்டும் என புரிய வைப்பார்கள்.

இவர்களின் மூளையே இவர்களின் மூலதனம் ஆகும். அழகான உடலைப்பை கொண்டவர்கள். பிறரை பார்த்தவுடன் வசீகரிக்கும் கண்களை கொண்டவர்கள். சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். இவர்களுக்கு எதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.

அனைவரைரையும் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி நடந்து கொள்வார்கள். விலங்குகள் மற்றும் செடி கொடிகளின் மீது அதிக பற்றுடையவர்கள். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை எடை போட முடியாது. அழகான சிரித்த முகத்தை கொண்டவர்கள். எந்த இடத்தில எப்படி நடக்க வேண்டும் என்பது இவர்களுக்கு தெரியும்.

ரேவதி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் தான் வகிக்கும் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். தங்களுடைய செயல்பாடுகள் மூலம் மற்றவர்களை கவர்ந்து இழுப்பார்கள். பயனங்கள் செய்வதில் அதிக நாடமுடையவ்றாய் இருப்பர்.

ரேவதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் மெல்லிய தேகத்தை கொண்டவர்கள். முன் கோபம் இவர்களின் சுபாவமாக இருக்கும். இவர்களின் மனம் அடிகடி சஞ்சலமடையும். இவர்களிடம் கஞ்சத்தனம் இருக்கும்.

ரேவதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் பலவான்கள். கடவுள் பக்தி நிறைந்தவராக இருப்பார்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய ஆற்றல் பெற்றிருப்பார்கள். தன்னை போலவே மாற்றவர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

ரேவதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் நீதிமான்களாக இருப்பார்கள். உண்மை பேசுபவராக இருப்பார்கள். எதிரிகளை எளிதாக வெல்வார். சத்தியத்தை பேசுபவர். வீரம் நிறைந்தவர்களாக இருப்பர்.


மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்
மற்ற ராசிகளின் பொதுவான குணங்களை இங்கே கிளிக் செய்வதன்மூலம் காணலாம்.
Previous Post Next Post