உத்திராடம் நட்சத்திரம் வாழ்க்கை முறை


உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : உத்திராடம்
உத்திராடம் நட்சத்திரத்தின் இராசி :
 தனுசு மற்றும் மகரம்
உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி :
 சூரியன்
உத்திராடம் நட்சத்திரம் முதல் பாத ராசி அதிபதி (தனுசு)
 : குரு
உத்திராடம் நட்சத்திரம் இரண்டு, முன்று, நான்காம் பாத ராசி அதிபதி (மகரம்) :
 சனி

உத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இவர்கள் கம்பீரமான நடையை கொண்டவர்கள். யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பிறர் சீண்டினால் தக்க பதிலடி தர தயங்க மாட்டார்கள். நல்ல அறிவாளிகள். தனது காரியங்களை சாதித்து கொள்வதில் வல்லவர்கள். சேமிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

இவர்கள் மிகுந்த மன வலிமை கொண்டவர்கள். வைராக்கியம் மிகுந்தவர்கள். எப்பொழுதும் நண்பர்களின் கூட்டத்திற்கு நடுவில் இருப்பார்கள். செய் நன்றியை மறக்க மாட்டார்கள். உண்மைகளை பேச வேண்டும் என்னும் கொள்கையை உடையவர்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள்.

தான தர்மங்கள் செய்து அனைவருக்கும் நல்லவராய் நடப்பார்கள். மனதில் பட்டதை எவ்வித ஒளிவு, மறைவும் இல்லாமல் பேசக்கூடியவர்கள். இதனால் எதிரிகளை நிறைய சம்பாதிப்பார்கள். சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல உடல் பலத்தை கொண்டவர்கள்.

உத்திராடம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் அழகு மிகுந்தவர்கள். நல்ல புத்தி கூர்மை உடையவராய் இருப்பார்கள். இரக்கமும், கருணை உள்ளமும் கொண்டவராய் இருப்பார்கள். சகல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.

உத்திராடம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் வாக்குச் சாதுர்யம் மிகுந்தவர். தன்னை தானே உயர்வாக பேசுவர். பணத்தை தேவை இல்லாமல் செலவு செய்வார்கள். எதிரிகளை பழிக்கு பழி வாங்குவார்கள். தோல்வியை தாங்கும் அளவுக்கு இவர்களுக்கு மனபக்குவம் இருக்காது.

உத்திராடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் பிறருக்காக தங்கள் இயல்பை மாற்றி கொள்ள மாட்டார்கள். சற்று குண்டான உடல் அமைப்பை கொண்டவர்கள். இவர்கள் மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.

உத்திராடம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நல்ல தொடர்பில் இருப்பர். கருணை, இரக்கம், தர்ம சிந்தனை போன்றவை இவர்களின் இயல்பு.

மற்ற ராசிகளின் பொதுவான குணங்களை இங்கே கிளிக் செய்வதன்மூலம் காணலாம்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்