தனுசு ராசி குணங்கள்

தனுசு ராசியின் பொதுவான குணங்கள் 

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். தனுசு ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகியவை இடம்பெறுகின்றன. தனுசு ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் நல்ல உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கவர்ச்சிகரமான உடலமைப்பை கொண்டவர்கள். இவர்கள் ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டால் அதில் எவ்வளவு குறுக்கீடுகள் வந்தாலும் அதை எதிர்த்து போராடி வெற்றி பெறுவார்கள். இவர்கள் பணத்தை விட மற்றவர்களின் மனதிற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தனுசு ராசிகார்களிடம் தற்பெருமை அதிகம் இருக்கும். தன்னைதானே உயர்த்தி பேசிகொள்வார்கள். இவர்கள் அதிக நண்பர்களை பெற்றிருப்பார்கள். யாராவது இவர்களை அவமானபடுத்தினால் அவர்கள் எப்பேற்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களை விட்டு விலகி விடுவார்கள். எடுத்து கொண்ட செயல்களில் தோல்வி அடைந்தால் எளிதில் துவண்டு விடுவார்கள். எதிர்காலத்தில் நடக்க கூடியதை முன் கூட்டியே அறிய கூடிய ஆற்றல் இவர்களிடம் இருக்கும்.

தனுசு ராசிகார்கள் பொதுவாக சுறுசுறுப்பானவர்கள். கள்ளம் கபடமின்றி எல்லோரிடமும் நன்றாக பழகுவார்கள். இவர்கள் யாருக்கும் அடிமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். இவர்கள் எளிதில் கோபப்பட மாட்டார்கள், கோபம் வந்தால் அது கடுமையானதாக இருக்கும். இவர்களிடம் நயமாக பேசினால் எதையும் சாதித்து கொள்ளலாம். தெய்வ பக்தி, கருணை, தர்ம சிந்தனை அதிகம் கொண்டவர்கள்.

தனுசு ராசிகார்கள் பிறர் பிரச்சனையை தன் பிரச்சனை என கருதி அவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்கள். அதனால் பிரச்சனைகளிலும் மாட்டி கொள்வார்கள். தனுசு ராசிகார்ரகள் பெரும்பாலோனோர் வசதியான குடும்பங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள். உடல் உழைப்பை அதிகம் விரும்ப மாட்டார்கள்.    

தனுசு ராசி மூலம் நட்சத்திரம், தனுசு ராசி பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் ஆகியவற்றின் பொதுவான குணங்களை அறிய மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.