-->

கன்னி ராசியின் பொதுவான குணம்

கன்னி ராசி குணங்கள்


கன்னி ராசியின்  பொதுவான குணங்கள்

கன்னி ராசியின் அதிபதி புதன் பகவானாவார். கன்னி ராசியில் உத்திரம் 2, 3, 4ம் பாதங்களும், அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தின் 1,2, பாதங்கள் ஆகியவை அடங்கும். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை எடை போட முடியாது. தங்களை இளமையாக வைத்து கொள்ள விரும்புவார்கள். எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களை பேச வைத்து ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள். இவர்கள் சொந்தமாக தொழில் செய்வதையே விரும்புவர்கள். மனதுக்கு பிடித்தால் மட்டுமே வேலை செய்வார்கள்.

கன்னி ராசிகாரர்கள் எதிலும் அவசரபடாமல் நிதானமாக செய்யக்கூடியவர்கள். இவர்கள் மகிழ்ச்சியாக இருபதையே விரும்புவார்கள். யாரையும் புண்படுத்தும்படி பேச மாட்டார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொள்ள கூடியவர்கள். இவர்கள் வசீகரமான தோற்றத்தை கொண்டவர்கள். கூடவே நன்னனடதையும் உள்ளவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் எதிரிகளே இருக்க மாட்டார்கள். தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள்.

இவர்கள் பேச்சாற்றலும், அறிவாற்றலும் ஒருங்கே கொண்டவர்கள். தன்னை தாழ்த்தி கொண்டு பிறரை உயர்த்தும் குணம் கொண்டவர்கள். இவர்கள் சுகமாக இருப்பதையே விரும்புவார்கள். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை பற்றி கவலை படமாட்டார்கள். குடும்பத்தில் உள்ளவர்களை கலந்தலோசித்தே எல்லாவற்றையும் முடிவு செய்வார்கள். இவர்கள உடலுழைப்பை அதிகம் விரும்ப மாட்டார்கள். இவர்களை அவமானபடுத்தினால் தாங்கி கொள்ள மாட்டார்கள்.

இவர்களுக்கு பணவரவில் குறைவு இருக்காது. இவர்களுக்கு சோம்பலாக இருபது பிடிக்காது. கடன் வாங்குவதை விரும்ப மாட்டார்கள். சிக்கனமாக செலவு செய்வார்கள். கிடைக்காத பொருளுக்கு ஆசை படமாட்டார்கள். இருப்பதாய் கொண்டு திருப்தி அடைய கூடியவர்கள். இவர்களுக்கு வீண் செலவு செய்வது பிடிக்காது. இவர்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள விரும்புவார்கள்.

கன்னிராசி உத்திரம் நட்சத்திரம், கன்னிராசி அஸ்தம் நட்சத்திரம், கன்னிராசி சித்திரை நட்சத்திரம், ஆகியவற்றின் பொதுவான குணங்களை அறிய மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.





Previous Post Next Post