-->

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள்


விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விருச்சிக லக்னத்தின் அதிபதி செவ்வாய் பகவனாவார். விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராய் இருப்பார்கள். இவர்களுக்கு முன் கோபம் என்பது உடன் பிறந்ததாகும். எதையும் எடுத்த எடுப்பில் முடிக்க நினைப்பார்கள். அவசரகுணம் அதிகம் இருக்கும். எல்லாவற்றையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற இருப்பார்கள். பொறுமை என்பது இவர்களுக்கு மிகவும் குறைவு.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் சுயமரியாதை மிகவும் முக்கியம் என நினைப்பவர்கள். இவர்கள் தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். யாருக்காவது இவர்கள் மூலம் காரியம் ஆகவேண்டும் என்றால் இவர்களை புகழ்ந்தால் போதும், காரியம் தன்னால் முடியும். விருச்சிக லக்னத்துக்கு சந்திரன் 5,9 ஆம் இடங்களில் இருந்தால் நல்ல வசதி வாய்ப்புகளும் செல்வமும்,செல்வாக்கும்,நிறைய சொத்துக்களும் இந்த லக்னத்தாருக்கு இருக்கும்.

இவர்களை யாரும் அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. அப்படியே யாரவது ஏமாற்றினாலும் அவர்களை நேரம் கிடைக்கும் போது பழிவாங்குவார்கள். பிறரை கேலியும் கிண்டலும் செய்வதில் வல்லவர்கள். தன்னுடைய கருத்தை எல்லோரும் ஏற்றுகொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இவர்கள் பிறருக்கு எதையாவது சொன்னால் பெரும்பாலும் பலிக்கும். இவர்களின் கணிப்பு பெரும்பாலும் சரியாகவே இருக்கும். எல்லாம் தெரிந்தவர்கள் போல பேசுவார்கள்.

பணவரவு எந்த வகையிலாவது இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இவர்களின் சொல்லுக்கு செல்வாக்கு அதிகம். எப்போதும் எதிரிகள் தொல்லை இருந்துகொண்டே இருக்கும் பிறரை அதிகாரம் செய்யும் வேலையே இவர்களுக்கு பிடித்ததாகும்.வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில்தான் இவர்கள் நன்றாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுடன் நெருக்கமாக பழக மாட்டார்கள். இவர்கள் சந்தேக புத்தி கொண்டவர்கள். எதாவது ஒரு இலட்சியத்தை எப்போதும் வைத்திருப்பார்கள். அதை அடைய கடுமையாக உழைப்பார்கள். வாழ்வில் வெற்றி பெறுவதற்காக எல்லா வழிகளிலும் முயற்சி செய்வார்கள்.

இவர்கள் சற்று முர்க்கத்தனம் மிகுந்தவர்கள். இவர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள். எதையும் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பது என்பது இவர்களுக்கு அறவே பிடிக்காது. இவர்களுக்கு சில சமயங்களில் இனம் புரியாத மனக் கவலைகளும் பதட்டமும் வந்து போகும். இவர்கள் தங்களுடைய கடுமையான உழைப்பு, அறிவாற்றல், முயற்சிகளில், முன்னேற்றம் அடைவார்கள்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Previous Post Next Post