-->

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள்


மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தின் அதிபதி குரு பகவானாவார். இவர்கள் மிகுந்த அன்பும் கனிவும் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியிடம், மிகுந்த ஈடுபாடு கொண்டு காதல் கொள்வார்கள். இவர்கள் துடுக்குத்தனம் மிக்கவர்கள். துருதுருவென வென எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் சிற்றின்ப பிரியர்கள். இவர்களுக்கு வாழ்க்கையின் மத்திய பகுதியில் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். குடும்பத்தை விட்டு சில காலம் பிரிந்து இருக்க வேண்டியிருக்கும். இவர்களில் பெரும்பாலோனோர் சற்று குண்டான உடலமைப்பை கொண்டிருப்பார்கள்.

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்கள். விருந்தோம்பலில் இவர்களை மிஞ்ச முடியாது. இவர்கள் சரளமாக பேசும் திறன் படைத்தவர்கள். எதையாவது பேசி கொண்டே இருப்பார்கள். இவர்கள் படித்த விவேகியாக இருப்பார்கள். இவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். தனக்கு துரோகம் செய்தவர்களையும் மன்னிக்க கூடிய இயல்பு உடையவர். இவர்கள் கவிதை, இலக்கியங்களில், மிகுந்த விருப்பமுடையவர். ஆனால் இவர்களால் ரகசியங்களை காக்க முடியாது.

இவர்கள் தன்னடக்கம் கொண்டவர்கள். அனைவரிடமும் சகஜமாக பேசி பழகும் தன்மை கொண்டவர்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மிகக் கம்பீரமான தோற்றத்தையுடையவர்கள். வரியவர்களிடத்தில் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர்கள். வெகுசீக்கிரத்தில் பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாவார்கள். தர்ம குணம் உள்ளவர்களாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்களிடம் பேசி ஜெயிப்பது என்பது முடியாது. இவர்களிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். இல்லையெனில் நாம் சொல்லும் பதிலேயே இவர்கள் புது கேள்வியை உண்டாக்குவார்கள். இவர்களிடம் வாயை கொடுத்து மாட்டி கொண்டால் அவ்வளவுதான்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் செல்ல பிள்ளையாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இவர்களுக்கு பெரு மதிப்பும், மரியாதையும், கௌரவமும், பிரியமாகவும், நடந்து கொள்வார்கள். இவர்கள் கலை மற்றும் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள். பிறர் செய்கிற வேலைகளில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். இவர்கள் சுகபோகமாக வாழ வேண்டும் என்றே விரும்புவார்கள். தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனம் கொண்டவர்கள்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Previous Post Next Post