வாழை இலை வறுத்த மீன் செய்வது எப்படி - Expres Tamil

Header Ads

வாழை இலை வறுத்த மீன் செய்வது எப்படி

வாழை இலை மீன் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்
  1. வஞ்சிரம் மீன் – 5
  2. வெங்காயம் – 2
  3. தக்காளி – 2
  4. பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கியது )
  5. கறிவேப்பிலை – சிறிதளவு
  6. கொத்தமல்லி தழை  - சிறிதளவு
  7. மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  9. உப்பு – தேவையான அளவு
  10. எண்ணெய் – தேவையான அளவு
  11. தேங்காய் பால் – சிறிதளவு
  12. வாழை இலை – 1
  13. எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை
  1. முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. மீனை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு அதில் மஞ்சள் தூள்,மிளகாய்,தூள்,உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. மீன் நன்கு மசாலாவுடன் ஊறியவுடன் தோசைகல்லில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும் .
  4. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. வதங்கியவுடன் கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய பூண்டு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு,சேர்த்து வதக்கவும்.
  6. பின் வதங்கிய மசாலாவுடன் சிறிதளவு கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கிளறவும்.
  7. பிறகு வதங்கிய தேங்காய்பால் மசாலாவை சிறிதளவு எடுத்து ஒரு வாழை இலையில் வைக்கவும்.
  8. அதில் வறுத்து வைத்துள்ள மீன் துண்டை வைக்கவும் .
  9. பின்னர் அதன் மீது சிறிதளவு மசாலாவை வைக்கவும்.
  10. வாழை இலையில் வைத்த பின்னர் இலையை நன்றாக மடித்து வாழை நாரினை கொண்டு கட்டவும்.
  11. பின்னர் அதனை தோசைக்கல்லில் வைத்து வறுத்து வைத்து எடுத்தால் சுவையான வாழை இலை வறுத்த மீன் ரெடி.


  

No comments