-->

வெள்ளிகிழமையில் பெண்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை எவை?


வெள்ளிகிழமை பூஜை செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்

வெள்ளி கிழமையில் பெண்கள்  செய்ய வேண்டியவை

  • திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து மானசீகமாக அம்மனை வேண்டி, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்.
  • பெண்கள் வெள்ளிகிழமை அன்று விடியற்காலையில் எழுந்து குளித்து
  • மங்களத்தின் சின்னமான குங்குமத்தை நெற்றியில் இட வேண்டும்.
  • அவ்வாறு செய்வதன் மூலம் பார்க்கும் அனைவருக்கும் லட்சுமியின் அருள் கிடைக்கும்,அதோடு மட்டுமல்லாமல் வீட்டிலும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.
  • பின் வாசலில் நீர் தெளித்து அரிசி மாவினால் கோலமிட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
  • பின் தண்ணீரில் மஞ்சள் கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.
  • இவ்வாறு தெளிப்பது ஏன் என்றால் வீட்டில் ஏதேனும் கேட்ட சக்திகளின் ஆக்கிரமிப்பு இருந்தால் அதனை விரட்டி நமக்கு நன்மை பயக்கும்.
  • பின்னர் பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து பூ வைக்க வேண்டும்.
  • வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும்.
  • 5 முகங்கள் கொண்ட குத்து விளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
  • சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், தாமரைப் பூக்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
  • சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும். இது கூடுதல் பலன்களை தரும்
  • வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி துர்கை அம்மனை எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் உடனடியாக திருமணம் நடைபெறும்.
வெள்ளி கிழமையில் பெண்கள் செய்யக் கூடாதவை
  • குத்து விளக்கை புஷ்பத்தினால் அணைக்க வேண்டும். அதை தவிர்த்து தானாகவும், ஊதியும் அணைக்கக் கூடாது.
  • இரவு நேரத்தில் வீட்டை கூட்டினால் குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது.
  • ஈரத்துணி அணிந்துக் கொண்டும், ஈரமான தலையுடனும் பூஜை செய்யக் கூடாது.
  • வாசல்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவற்றில் உட்காரக் கூடாது.
  • விளக்கு ஏற்றிய பின்பு பால், தயிர், உப்பு, ஊசி ஆகிய பொருட்களை பிறருக்கு கொடுக்கக் கூடாது.
  • நம்முடைய வீட்டிற்குள் அல்லது வீட்டின் வெளியில் நகத்தை வெட்டக் கூடாது.
  • செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்யவோ கூடாது.
  • இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.





.





.
Previous Post Next Post