-->

கர்ப்ப காலத்தின் மூன்றாவது மும்மாதங்கள் ஒரு பார்வை

மூன்றாவது மூன்று மாதங்கள் (7-10)

முதல் இரண்டு ட்ரைமெஸ்டர் காலத்தை வெற்றிகரமாக கடந்து உங்கள் இறுதி பிரசவ காலமான இந்த மூன்றாவது ட்ரைமெஸ்டரில் நுழைந்து விட்டீர்கள். இந்த மூன்றாவது ட்ரைமெஸ்டரின் தொடக்க காலத்தில் அதாவது, ஏழாம் மாதத்தில் வயிற்றின் சுற்றளவு சற்று பெரிதாகி விடுவதால் உங்களால் சுலபமாக உட்கார்ந்து எழுந்துகொள்ள முடியாது. உட்கார்ந்து எழும்போது அதிகமாக மூச்சு வாங்கும். தூங்கி எழுவது சிரமமாகத் தோன்றும். இடுப்பு மற்றும் முதுகு அவ்வப்போது வலிப்பது போல் இருக்கும். இதனால் சரியான நேரத்திற்கு ஒழுங்காக சாப்பிட்டு, காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி செல்வது நல்லது.

கர்ப்ப காலத்தின் 3வது மூன்று மாதங்கள்


எட்டாவது மாதத்தின் தொடக்கத்தில் அசதி அதிகமாக இருக்கும். சிலசமயம் ரத்தப்போக்கு இருந்தாலோ, உடலின் நீர் இறங்கிக்கொண்டே இருப்பது போலிருந்தாலோ, இடுப்பு வலி அதிகம் இருந்தாலோ உடனடியாக தக்க சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

ஒன்பதாவது மாதத்தில் குழந்தை வெளியே வர ஏதுவாக தலைப் பாகம் கீழே இருக்கும்படி நகர ஆரம்பிக்கும். இன்னும் சில மாதத்தில் உங்களின் புது உயிர் இந்த உலகத்தை காண தன்னை தயார்படுத்தும் காலம் இந்த ஒன்பதாம் மாதம்.

ஏழு முதல் ஒன்பதாம் மாதத்திற்குள் குழந்தை பிறந்தால் என்ன ஆகும்?

வெகு சிலருக்கு ஏழாம் மாதத்துக்குப் பிறகு, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் குழந்தை பிறந்தால் குழந்தையை மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் வைத்து குழந்தையை காப்பாற்றி விடலாம். ஆனால் அந்தக் குழந்தைக்கு ஒரு சில சிக்கல்கள் வர வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் குழந்தையின் முழு உறுப்புகளும் முழுவதும் வளராததே இதற்க்கு காரணம் ஆகும்.

மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலத்தில் குழந்தையின் வளர்ச்சி

குழந்தை இந்த காலகட்டத்தில் வயிற்றில் அசைந்து கொண்டே இருக்கும். தனது கைகளையும், கால்களையும் அசைத்து கொண்டே இருக்கும். இந்த அசைவுகளை எண்ணி சந்தோஷம் அடையாத பெண்களே இல்லை எனலாம். தனது கணவரிடமும் இதை காட்டி பூரிப்படையும் பெண்கள் பலர். குழந்தை இவ்வாறு அசைவது தனது தசைகளை வலுபடுத்தி கொள்ளவே.

3வது ட்ரைமாஸ்டர் ஒரு பார்வை


இந்த காலகட்டத்தில் குழந்தையின் எடை வேகமாக கூட ஆரம்பிக்கும். சில நேரங்களில் குழந்தை உதைப்பதால் வலி கூட ஏற்படலாம். குழந்தை வளர வளர அதன் அசைவுகள் குறைய ஆரம்பிக்கும். இதற்க்கு காரணம் குழந்தை பிறப்பதற்கு ஏற்ப பிறப்புறுப்பில் நகர தொடங்கியதே ஆகும்.

இந்த காலகட்டத்தில் குழந்தையின் எடை கிட்டதட்ட 2.7 கிலோவில் இருந்து 3 கிலோ வரை இருக்கும். ஒரு சில குழந்தைகள் 3.5 கிலோ எடை வரை இருக்கும். மொத்தத்தில் உங்களின் சின்னஞ்சிறு உயிர் இந்த உலகத்தை காண தன்னை தயார் படுத்தி கொள்ளும் காலம் இது.

மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

பெண்களின் மார்பகங்கள் சற்று கனமாகவும், நிறம் மாறியும் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் அடிவயிற்றில் சில சமயங்களில் வலி தோன்றி மறையும். எடை அதிகரிப்பதால் உடலின் சமநிலை மாறிவிடும். மேலும் இந்த காலங்களில் முதுகுவலி அதிகமாகும். தொடைகள் மற்றும் கால்களின் நரம்புகள் அடிக்கடி மரத்துப் போகலாம். பொய் வலி தோன்றி மறையும்.


பிரசவ காலத்தில் பெண்களின் உடலில் எவ்வளவு நீர் இருக்கும் தெரியுமா?

வயிற்றில் குழந்தை வளர வளர பெண்களின் வயிற்றில் நீர் அதிகமாக தேங்க ஆரம்பிக்கும். குழந்தை, நஞ்சுக்கொடி, பனிக்குடம் ஆகியவற்றை சேர்த்து சுமார் 3.5 லிட்டர் தண்ணீர் தேங்கி இருக்கும். இவை மட்டும் இல்லாமல் கர்ப்பபை, மார்பகம், ரத்தம் என மூன்றிலும் சேர்த்து 3 லிட்டர் தண்ணீர் இருக்கும். எனவே கர்ப்ப காலத்தில் உடலில் குறைந்தது 6.5 லிட்டர் தண்ணீர் இருக்கும். கால் பாதங்கள் வீக்கமாக இருப்பதை பல பெண்கள் உணர்ந்திருப்பார்கள், இதற்க்கு காரணம் கால் பகுதியில் மட்டும் குறைந்தது 1 லிட்டர் தண்ணீர் இருக்குமாம்.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.



அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.

Previous Post Next Post