-->

பிரசவம் எப்போது நிகழும்? பிரசவத்தின் அறிகுறிகள் என்ன? பிரசவத்தில் உண்மை வலி மற்றும் பொய் வலிக்கு உள்ள வித்தியாசம்

பிரசவம் எப்போது நிகழும் தெரியுமா?

நாம் முன்பே சொன்னது போல பிரசவ தேதியானது சரியாக அறிக்கைகளில் குறிப்பிட்ட அதே தேதியில் நடக்காது. பிரசவ தேதியானது குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ நடக்கும். சரியாக அதே தேதியில் பிரசவமானது குறிப்பிட்ட ஒரு சிலருக்கே நடக்கும்.

உண்மை வலிக்கும் பொய் வலிக்கும் உள்ள வித்தியாசங்கள்


சரி எப்போதுதான் பிரசவம் நடக்கும்? அதற்க்கு எதாவது அறிகுறிகள் உண்டா?
கவலையேபடாதீர்கள் உங்களுக்கு தெரியாமல் பிரசவமானது நடக்கவே முடியாது. பிரசவம் சில நாட்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ தொடங்க இருப்பதை நம்முடைய உடலானது சில அறிகுறிகள் மூலம் வெளிபடுத்தும். அந்த அறிகுறிகள் என்ன என்பதை கீழ்காணும் அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அவை பின் வருமாறு,

1. அடிவயிறு லேசாகும் :

குழந்தையானது அடிவயிற்றில் மிகவும் இறங்கி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது எதனால் ஏற்படுகிறது என்றால் குழந்தையானது பிறப்புறுப்பு பாதையில் பிரசவம் நடப்பதற்க்கு ஏதுவாக சரியாக பொருந்தியதால் ஏற்படுகிறது. இந்த அறிகுறியானது பிரசவம் நடப்பதற்க்கு சில நாட்களுக்கு முன்போ அல்லது சில மணி நேரத்திற்கு முன்போ நடக்கும்.

2. ரத்தக்கசிவு ஏற்படும் :

பிறப்புறுப்பு வழியே ரத்தகசிவு ஏற்படும், இந்த ரத்தமானது தெளிவான பிங்க் நிறத்தில் இருக்கும். கருப்பையின் வாயில் சேர்ந்திருந்த திரவகட்டியானது பிறப்புறுப்பின் வழியே வெளியே தள்ளுவதால் ஏற்படுகிறது. இந்த அறிகுறியானது பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்போ அல்லது பிரசவம் தொடங்க உள்ள சில மணி நேரம் முன்போ ஏற்படும்.

3. பிறப்புறுப்பு சவ்வு கீறப்படும் :

பிறப்புறுப்பிலிருந்து நீர் வெளியேறுதல். இந்த நீரானது குழந்தையை சுற்றியுள்ள பனிக்குடம் உடைவதால் வெளியாகிறது. இந்த அறிகுறியானது பிரசவத்திற்கு பல மணி நேரங்கள் முன்பு தொடங்கி பிரசவத்தின் போதும் நிகழும்.

பிரசவத்தில் உண்மை வலிக்கும் மற்றும் பொய் வலிக்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பிரசவம் தொடங்கபோவதன் அறிகுறிகள்


சில நேரங்களில் பொய் வலிக்கும், உண்மையான வலிக்கும் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது கடினமாகும். பிரசவ நேரத்தில் சிலருக்கு ‘பொய் வலி’ வரும். உண்மையான ‘பிரசவ வலிக்கும், பொய்யான வலிக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. உங்களுக்கு வந்துள்ளது பொய் வலிதான் என்பதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். அவை பின்வருமாறு,

1. கர்ப்பப்பை சுருங்கி விரிதலின் இடைவெளி

உண்மை வலி: உண்மையான வலியானது 30-60 வினாடிக்கு ஒரு முறை வரும். அதே போல நேர இடைவெளியும் ஒரே சீராக இருக்கும். நேரம் அதிகமாக அதிகமாக வலி குறையும்.
பொய் வலி: பொய் வலியானது உண்மை வலி போல ஒரே சீரான இடைவெளியில் இருக்காது. பொய் வலியானது எப்போதாவது வந்து போகும்.

2. வெளியேற்றம்

உண்மை வலி: பிறப்புறுப்பில் இருந்து கெட்டியான திரவம் வெளியேறும். மேலும் அதனுடன் ரத்த துளிகளும் கலந்திருக்கும்.
பொய் வலி: மேற்சொன்ன எந்த நிகழ்வும் பொய் வலியின் போது ஏற்படாது.

3. வயிற்றின் அசைவில் மாற்றம்: 

உண்மை வலி : நடந்தாலோ, உட்கார்ந்தலோ, கர்ப்பையின் சுருங்கி விரிதல் தன்மையின் இடைவெளி குறையாது.
பொய் வலி : நடக்க ஆரம்பித்தாலோ, அல்லது உட்கார்ந்தாலோ கர்ப்ப பை சுருங்கி விரிவது நின்று விடும்.

4. கர்ப்பபை சுருங்கி விரிதலின் வலிமை

உண்மை வலி : உண்மை வலியின் போது சுருங்கி விரிதலின் வலிமை அதிகரித்து கொண்டே இருக்கும்.
பொய் வலி : நேரம் செல்ல செல்ல வலிமையடையாது.

5. வலி :

உண்மை வலி : உண்மை வலியானது இடுப்பின் பின்புறத்தில் உணரப்பட்டு பின் முன்புறம் வரும். மேலும் இந்த வலியானது மேலும் கீழும் நகர்ந்து கொண்டே இருக்கும்.
பொய் வலி : பொய் வலியானது அடிவயிற்றின் முன்பக்கம் மட்டுமே தெரியும்.

இந்த பதிவின் மூலம் உண்மை வலிக்கும், பொய் வலிக்கும் இடையேயான வித்தியாசத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த வலிகளை பிரித்தறிவதில் சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விடுவது நல்லது.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.  


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.

Previous Post Next Post