-->

பக்காவா ஸ்கெட்ச் போட்டு சொல்லி அடிப்பதில் இந்த 6 ராசிகாரர்கள் மட்டும் கில்லிகளாம்


திட்டமிடுவதில் யார் சிறந்தவர்கள் தெரியுமா?

எந்த வேலையை ஈடுபட்டாலும் அது வெற்றிகரமாக முடிக்க முயற்சி என்பது எந்தளவு அவசியமோ அந்த அளவு அதை வெற்றிகரமாக முடிப்பதற்கு திட்டமிடுதலும் அவசியம். எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் சரியான திட்டமிடல் இல்லையென்றால் நீங்கள் செய்யும் அனைத்து முயற்சியும் " விழலுக்கு இழைத்த நீர் போலதான் ஆகும்.

திட்டமிடுவதில் சாமர்த்தியசாலிகள்


முயற்சியை எல்லோரும் செய்யலாம், ஆனால் அது வெற்றி பெறுவதற்கு சரியான திட்டம் தீட்டுபவர்களே அதில் வெற்றிபெறுகிறார்கள். இந்த திறமை எல்லோருக்கும் வந்துவிடாது, ஆனால் சிலருக்கு இந்த திறமையானது பிறவியிலேயே இருக்கும். அதற்கு அவர்கள் பிறந்த ராசிகூட ஒரு காரணமாக இருக்கலாம். அதிலும் கீழ்காணும் இந்த 6 ராசிக்காரர்கள் திட்டமிடுவதில் கில்லிகளாக இருப்பார்கள் என்று கூறுகிறது ஜோதிடம். சரி அவை எந்தெந்த ராசி என்று இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் பொதுவான குணம்

ரிஷப ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் திட்டமிட்டே செய்வார்கள். ஏனெனில் அவர்கள் நிகழ்காலத்தை விட வருங்காலத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தனது இலாபத்திற்காக இவர்கள் திட்டமிடும் போது அது தவறாக போவதற்கு வாய்ப்பேயில்லை. ஏனெனில் அவர்கள் ஒரு செயலை பற்றிய எல்லா கோணங்களிலும் சிந்தித்து அதன் பிறகே திட்டமிடுவார்கள். ஏனெனில் சவால்களை எதிர்கொள்வது இவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

கடகம்

கடக ராசி

கடக ராசிக்கார்கள் அனைத்து விதமான நிகழ்ச்சிகள், வேலைகளை திட்டமிடுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் இவர்கள் தான் அங்கு அதன் மையப்கருவாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் செயல்திறன் கொண்டவர்கள். இவர்களின் சரியான திட்டமிடுதல் காரணமாக அனைவரின் நம்பிக்கையையும் மிக விரைவில் பெற்று விடுவார்கள்.

கன்னி

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்கள் தான் மற்றவர்களை விட திட்டம் தீட்டுதல் சிறந்தவர்கள் என்னும் நம்பிக்கை அவர்களுக்கே வரும் வரை அவர்களின் திட்டத்தை அவர்களே நம்பமாட்டார்கள். ஒரு வேளை தன்னுடைய திட்டமிடல் தான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிட்டால் அதை செயல்படுத்துவதில் இருமடங்கு வேகத்தில் அவர்கள் செயல்படுவார்கள். ஆனால் மற்றவர்களை அவ்வளவு எளிதில் நம்பமாட்டார்கள். எனவே எப்பொழுதும் தங்களுக்கான திட்டங்களை தாங்கள்தான் சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை இவர்களிடம் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி

இவர்கள் திட்டங்களை தீட்டுவது மட்டும்மல்ல அதை செயல்படுத்துவதிலும் வல்லவர்கள். திட்டமிடுவதற்கான அவசியம் நேரடியாக அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். தங்களின் சூழ்நிலையை தங்கள் திட்டமிடுதலின் மூலம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள். ஒரு காரியத்தை இவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விட்டால் அவர்களை முழுமையாக நம்பலாம்.

மகரம்

மகர ராசி

மகர ராசிக்காரர்கள் திட்டமிடுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். எங்கு வேலை செய்தாலும், என்ன வேலை செய்தாலும் அவர்கள் தலைமை பொறுப்பில் இருப்பார்கள். இவர்களின் திட்டமிடுதல், செயல்படுத்தும் திறமைக்காகவே இவரை சுற்றியிருப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இவர்களை நம்புவார்கள். திட்டமிடுவதும் அது சரியான கோணத்தில் வேலை செய்கிறதா என்பதை பார்ப்பதும் இவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களாகும்.

கும்பம்

கும்ப ராசி

இவர்களின் எண்ணம் எப்பொழதும் சதா எதிர்கால திட்டங்களை பற்றி தான் இருக்கும். திட்டங்களையும் சவாலான செயல்களை செய்வதிலும் இவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். எதையும் புதிய கோணத்தில் அணுகுவார்கள். இவர்களின் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுவதுடன் ரசனைமிக்கதாகவும் இருக்கும். இவர்களை நம்பி எந்த பொறுப்பை வேண்டுமென்றாலும் கொடுக்கலாம். இவர்களை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் அது முடிந்து விடும் என தைரியமாக நம்பலாம்.

Previous Post Next Post