-->

பேன் , பொடுகு தொல்லையில் இருந்து தப்பிக்க சிறந்த எளியமையான வழிகள்


பேன் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?

பேன் கூந்தலின் அழகையும், ஆரோக்கியத்தையும் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலையில் பேன் இருந்தால் அது அரிப்பையும். அலர்ஜியையும் ஏற்படுத்தி விடும். அதுமட்டுமல்லாது அவை நம் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்கிறது.

ஆனால் இவை நமக்கு ஏந்தவித நோய் தொற்றையும் ஏற்படுத்துவது இல்லை. இந்த பேன் தொல்லையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகத்திற்கு செல்வோர் தலையில் அரிப்பு ஏற்படுவதால் பல்வேறு பிரச்சனை ஏற்படுகிறது.



தலையில் பேன் அதிகமாக இருந்தால் தலையில் கட்டிகள், புண்கள் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பேன், ஈறு, பொடுகு தொல்லை இருப்பவர்கள் உபயோகபடுத்திய தலையணையை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருந்தால் மற்றவர்களுக்கு பேன் தொல்லை ஏற்படாது.

பேனை எவ்வாறு கட்டுபடுத்துவது ?

  • நம் குளிக்கும் தண்ணீரில் முதல் நாள் இரவே வேப்பிலையை போட்டு வைத்து மறு நாள் அந்த தண்ணீரில் குளித்து வந்தால் பேன் குறைந்து விடும்.
  • வேப்பிலையை பேஸ்ட் போல அரைத்து குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தலையில் தேய்த்து ஊற வைத்து பின் குளித்தல் நல்ல பலன் கிடைக்கும்.
  • இரவு தூங்கும் போது வேப்பிலை, துளசி இரண்டையும் தலைக்கு கீழே வைத்துக் கொண்டு தூங்கினால் பேன் குறைந்து விடும்.
  • வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைத்து மறு நாள் அந்த வெந்தயத்துடன் தேங்காய் பால் சேர்த்து நைசாக அரைத்து பின் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து பின் குளித்து வந்தால் பேன் , பொடுகு தொல்லை விரைவில் குறைய தொடங்கும்.
  • குப்பை மேனி கீரை சாறு எடுத்து அதை குளிக்கும் முன் தலையில் தேய்த்து பின் குளித்து வர வேண்டும்.
  • 10 பூண்டுகளை தோல் சீவி மைய அரைத்துக் கொள்ளுங்கள், இத்துடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுழுவதும் தேய்த்து அரைமணிநேரத்தில் கழித்து குளிக்கவும்.
  • பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும், இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் ஹேர்பேக்காக போட்டுக் கொள்ளவும், சுமார் ஒரு மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
  • உப்பு மற்றும் வினிகரை கலந்து தலைமுழுவதும் தடவவும், ஷவர் கேப் கொண்டு சுமார் இரண்டு மணிநேரம் தலையை மூடிக்கொண்டு ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்கவும், மூன்று நாட்களுக்கு ஒருமுறை இதை செய்து வந்தால் பலன் கிடைக்கப்பெறும்.


Previous Post Next Post