-->

கார்த்திகை தீப திருநாளில் வீட்டில் எப்படி வழிபட வேண்டும் ?


கார்த்திகை தீபத் திருநாள் 

கார்த்திகை தீபம் என்பது ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரன்றுன்று திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த தீபத்திருவிழா திருவண்ணாமலையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் விளக்கேற்றி கொண்டாடப்படுகிறது. நாளை ( 10.12.2019 ) கார்த்திகை தீப திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.


திருக்கார்த்திகை திருவிழா முன்பு ஐந்து நாட்கள் கொண்டாடப்பட்டது. 
முதல்நாள் பரணி தீபம் ஏற்றுவார்கள். பரணி காளிக்கு உரிய நாளாகும். ஆதிநாளில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள். அண்ணாமலையார் தீபம் கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். இது, சிவபெருமானைக் குறித்துக் கொண்டாடும் விழாவாகும். இதை அண்ணாமலையார் தீபம் என்று அழைக்கின்றனர்.

விஷ்ணு தீபம் 3வது நாள் ரோகிணி நட்சத்திரத்தில் வைணவர்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை விஷ்ணு தீபம் என அழைப்பர். இது, விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. நாட்டுக் கார்த்திகை இது நான்காவது நாள் மிருகசீரிட நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது நாட்டுக் கார்த்திகையாகும். பெண்ணையும் மருமகனையும் வீட்டுக்கு அழைத்து வந்து சிறப்புகள் செய்து விருந்து வைப்பர். இந்நாளில் குலதெய்வங்கள் வீட்டுக்கு வந்து அருள்புரிவதாக நம்பிக்கை.

தோட்டக் கார்த்திகை ஐந்தாம் நாள் திருவாதிரை தினத்தில் அனுஷ்டிக்கப்படுவது, தோட்டக் கார்த்திகையாகும். வயல்கள், தோட்டங்கள், கிணற்றடிகளில் தீபங்களை ஏற்றி வழிபடுகின்றனர்.

கார்த்திகை தீபத்தன்று வீட்டில் செய்ய வேண்டியவை

  • கார்த்திகை தீபத்திருநாளன்று விடியற்காலையில் எழுந்து வீட்டினை சுத்தம் செய்து கோலமிட வேண்டும்.
  • பூஜை அறையை சுத்தம் செய்து அரிசிமாவினால் கோலமிட வேண்டும்.
  • வீட்டில் இருக்கும் சுமங்கலி பெண்கள் அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலை அண்ணாமலையார் தீபம் ஏற்றிய பின்னர் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு பின்னரே விரதத்தை முடிக்க வேண்டும்.
  • விளக்கேற்றும் போது பூஜை அறையில் 3 அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.
  • 3 கிண்ணங்களை அடுத்து ஒரு கிண்ணத்தில் அரிசியும், ஒரு கிண்ணத்தில் பருப்பும் , ஒரு கிண்ணத்தில் உப்பும் வைத்து அதில் அகல் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
  • இவ்வாறு விளக்கு ஏற்றி வைப்பதால் சகல செல்வங்களும் என்றென்றும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.


Previous Post Next Post