-->

தண்டுக்கீரை மருத்துவ பயன்கள்


தண்டுக்கீரை நன்மைகள் 

தண்டுக் கீரை மிக எளிதில் கிடைக்க கூடிய ஒரு வகை கீரையாகும். தண்டுக் கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப் பயன்படுத்தலாம். இந்த கீரை பெரிய இலைகளையும் பருத்த தண்டையும் உடையது.  இது உயரமாக வளரும் ஒரு வகைக் கீரையாகும்.
தண்டுகீரையில் இரு வகையுண்டு. ஒன்று சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்றொன்று பச்சை நிறத்தில் இருக்கும். இதில் சிவப்பு நிறத்தில் இருக்கும் கீரை அதிக சுவைமிக்கது.

தண்டுகீரை மருத்துவ நன்மைகள்


தண்டுக்கீரையில் வைட்டமின் ஏ, சி, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புசத்து,  தாமிரச்சத்து, மணிச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தயமின், ரிபோஃப்ளேவின், நிகோடினிக் அமிலம், புரதம், தாது உப்புக்கள், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போன்ற சத்துக்கள் அதிக அளவில் அடங்கியுள்ளன.

தண்டுகீரை அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. எனவே சளித் தொல்லை உள்ளவர்கள், சைனஸ் நோயால் அவதிப்படுபவர்கள், ஆஸ்துமா உள்ளவர்கள், வாத நோய் உள்ளவர்கள் இந்த கீரை சாப்பிடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

தண்டுக்கீரை மருத்துவ பயன்கள்

தண்டுகீரை மருத்துவ பயன்கள்

1. குடல் புண், அல்சர் போன்ற நோய்களால் பாதிக்கபட்டவர்கள் தண்டுக்கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.
2. கருப்பை தொடர்பான பிரச்சனைகள் குறைக்கும் தன்மை தண்டுக்கீரைக்கு உண்டு.
3. தண்டுகீரை உடலுக்கு குளிர்ச்சியை அளிக்க வல்லது. உடல் உஷ்ணத்தால் பாதிக்கபட்டவர்கள் இந்த கீரையை உணவில் எடுத்து கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
4. தண்டுக்கீரையில் இரும்புச் சத்தும், கால்சிய சத்தும் அதிகமாக காணப்படுகிறது.
5. மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.
6. தண்டுகீரையை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எடுத்து கொண்டால் அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
7. தண்டுகீரை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
8. அதிக உடற்பருமன் கொண்டவர்கள் மற்றும் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு தண்டுகீரை ஒரு அருமருந்தாகும்.
9. பெண்களின் கர்ப்பபை பிரச்சனைகளுக்கு இந்த கீரை மிகவும் நல்லது.
10. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் முதுமையடைவதில் இருந்து தப்பிக்கலாம்.   

Previous Post Next Post