-->

வாழைப்பூவின் மருத்துவ பயன்கள்


வாழைப்பூவின்  நன்மைகள்

வாழைப்பூ என்பது வாழை மரத்தில் உருவாகும் பூவை குறிக்கும். இதனை வாழை மொட்டு என்றும் அழைப்பார்கள். பூ வகையை சார்ந்ததாக இருந்தாலும் இது சமையலில் காய்கறி போல பயன்படுத்தபடுகிறது. வாழைப்பூவைக் வைத்து குழம்பு, அடை, சூப் போன்று பல்வேறு வகையான உணவுகள் தயாரிக்கபடுகின்றன.


வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது. அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூ. வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன.

வாழைப்பூவின் மருத்துவப் பயன்கள்

1. வாழைப்பூவை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.
2. வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
3. இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
4. வயிற்று புண்களை குணமாக்கும் சக்தி கொண்டது வாழைப்பூ.
5. வாழைப்பூவானது மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.
6. பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
7. வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் கோளாறுகள் சரியாகும்.
8. உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து அதனுடன் நெய் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.


Previous Post Next Post