ரைஸ் பிரான் ஆயில்

அரிசித் தவிட்டு எண்ணெய் என்பது தான் ‘ரைஸ் பிரான் ஆயில்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது அரிசியின் தவிட்டில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை சமையல் எண்ணெய். இது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
இதில் அதிக அளவு வைட்டமின் ஈ உள்ளது. இது  இதய நோய் வராமல் தடுக்கிறது. அரிசி தவிடு எண்ணெயானது தாவர எண்ணெயாகவும் மற்றும் சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது.


ரைஸ் பிரான் ஆயில் பயன்கள்

இருதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து ரைஸ் பிரான் ஆயில் நம்மை பாதுகாக்கிறது. இந்த எண்ணெய் இதயத்தை பாதுகாக்கும் என்று சுகாதார அமைப்பும், உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க இதய மருத்துவர் சங்கமும் கூறியுள்ளது. ஜப்பானில் இந்த ரைஸ்பிரான் ஆயிலை ஹார்ட் ஆயில்(Heart oil) என்றும், அமெரிக்காவில் ஹார்ட் ஃபுட்(Heart food) என்றும் அழைக்கிறார்கள்.

ரைஸ் பிரான் ஆயிலின் தனித்தன்மை

ரைஸ் பிரான் ஆயில் குறைவான அடர்த்திக் கொண்டது. இதனால் இது எளிதில் சூடாகிவிடும் அதனால் 20% வரை எரிபொருள் சேமிப்பு கிடைக்கும். இந்த எண்ணையில் கொலஸ்ட்ரோல் இருக்காது. கொழுப்புத் தன்மை இருக்காது. எப்போதும் சுத்தமாகவே இருக்கும். இந்த எண்ணெய்க்கு என்று தனி மணமோ, சுவையோ கிடையாது. நாம் சமைக்கும் உணவின் மணத்தையும், சுவையையும் அப்படியே கொடுக்கும். ரைஸ்பிரான் ஆயில் உபயோகித்து செய்த பலகாரங்களில் சிக்கு வாசனை வரவே வராது. இந்த எண்ணெயில் சமைத்த உணவை சாப்பிடும் போழுது வயதானவர்களுக்கும் எளிதில் ஜீரணமாகும். நெஞ்சு எரிச்சல் வராது, குறிப்பாக ரைஸ்பிரான் ஆயிலில் செய்யப்படும் பதார்தங்கள் அதிக நேரம் மொருமொருப்புடன் இருக்கும்.

ரைஸ் பிரான் ஆயில் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது

பெரும்பாலான மக்களுக்கு ரைஸ்பிரான் ஆயில் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரிவதில்லை. சிலர் அரிசியில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றும் சிலர் அரிசி உமியிலருந்து தயாரிக்கப்படுகிறது என்றும் நினைக்கிறார்கள்.
ஆனால் நெல்லில் அரிசிக்கும் உமிக்கும் இடையில் உள்ள பழுப்பு நிற மாவு போன்ற பொருளில் இருந்துதான் ரைஸ் பிரான் ஆயில் தயாரிக்கப்படுகிறது. கைக்குத்தல் அரிசியில் அந்த மாவு நிற பழுப்பு பொருளை கண் கூடாகப் பார்க்கலாம். தற்போதைய நவீன யுகத்தில் அரிசி சாதம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பழுப்பு நிறத்திலான சத்தான பகுதியை நீக்கிவிட்டு பாலிஷ் செய்யப்பட்ட சத்தில்லாத அரிசி சாதத்தை தான் நாம் சாப்பிடுகிறோம்.
ரைஸ் பிரான் ஆயிலின் மருத்துவ பயன்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்,

இருதயத்தை பாதுகாக்கும்

ரைஸ் பிரான் ஆயிலில் ஒரைசனால் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அது உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுப்பதால் இதயநோய் வராமல் இருக்க உதவும் என்று கருதப்படுகிறது. மேலும் இந்த எண்ணையில் ஃபெரோலிக் அமிலம் மற்றும் சைட்டொஸ்டெரால் போன்றவை இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதைத் தடுக்குமாம்.


ரைஸ் பிரான் எண்ணெய்

சர்க்கரையை கட்டுபடுத்தும்

மேலும் ரைஸ்பிரான் ஆயிலில் உள்ள ‘லைபோயிட் ஆசிட்’ என்ற வேதிப்பொருள் நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுகளை கட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த எண்ணெயாக திகழ்கிறது.

சருமத்தை பாதுகாக்கும்

ரைஸ்பிரான் ஆயிலில் ‘ஸ்குவாலின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது தோலுக்கு பளப்பளப்பையும் பாதுகாப்பையும் கொடுக்கிறது. மேலும்  இது  தோலில் சுருக்கம் விழுவதையும் தவிர்கிறது. தலையில் பொடுகு வராமலும், தோலில் அரிப்பையும் கட்டுப்படுத்துகிறது. இதனால்தான் ரைஸ் பிரான் ஆயில் அழகுசாதன பொருள்கள் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.  பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளில் உதவி ஆற்றலையும் புத்துணர்வையும் அளிக்கிறது.