-->

அத்திபழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்


அத்தி பழம்

அத்திப்பழம் இரண்டு வகைப்படும். ஒன்று சீமை அத்திப்பழம் , மற்றொன்று நாட்டு அத்திப்பழம். அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கி வளரக்கூடிய பழமாகும். 

அத்திபழத்தின் உட்புறம் சிவப்பு நிறத்தில்  காணப்படும். விதைகள் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது.


அத்திபழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது. இரத்த விருத்தியை அதிகபடுத்துகிறது. பித்ததினை சரி செய்ய அத்திபழம் பெரிதும் பயன்படுகிறது.

சித்த மருத்துவத்தில் அத்திபழம் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்திபழம் மட்டுமல்லாமல் அத்திக்காய்,அத்திப் பூ, அத்தி இலை, அத்தி வேர், அத்திப் பட்டை, அத்திப் பால் அனைத்துமே மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

 
அத்திபழத்தின் நன்மைகள்

தினசரி 2 அத்திபழங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து அத்திபழதினை சாப்பிடுவதன் மூலம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும்.

அத்திபழத்தில் உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இரத்த சிவப்பணுக்களை உடலில் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.
அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை பெருகும்.

குடிப்பழக்கத்தால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்க அத்திபழம் பயன்படுகிறது. தினசரி 2 அத்திபழத்தினை சாப்பிட்டு வருவதின் மூலம் சிறுநீரக பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் குணமடையும்.

தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதால் உடல் நன்றாக கொழு கொழுவென்று இருக்கும்.

50கி. அளவுள்ள அத்திப்பழம் ஒன்றில் நார்ச்சத்து-5.8%, பொட்டாசியம் -3.3% கால்சியம் -100மி.கி. இரும்பு -2.மி.கி. மாங்கனீஸ்-3%, கலோரி -2% வைட்டமின் பி 6-3% அளவு உள்ளது. மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் 2 முதல் 4 மடங்கு வரை தாது உப்புக்களும், சத்துக்களும் அடங்கியிருக்கின்றன.

அத்திப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் இ, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக நிறைந்துள்ளதால் அத்திபழதை வாரத்தில் 2 நாட்களாவது எடுத்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு ஆரோக்கியத்தையும் தருகிறது.

அத்தி பழத்தின் மருத்துவ பயன்கள்

இதய ஆரோக்கியம்

அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும், இதய ஆரோக்கியம் மேம்படும்.

தோல் நோய்

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்க பயன்படுகிறது. 1/2 காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.

புற்று நோய்

புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் இந்த அத்திப்பழத்தில் அதிக அளவு உள்ளதால் நம் உடலானது புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்து உடலை புற்று நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.

மலச்சிக்கல்

அத்திப்பழம் நார்ச்சத்து நிறைந்த ஒரு பழமாகும். மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மலச்சிக்கல் பாதிப்பை சரிசெய்யலாம்.

வாய் துர்நாற்றம்

அத்திப்பழம் அடிக்கடி சாப்பிடுவதால் வாய்நாற்றம் நீங்கி வாய்க்கு புத்துணர்ச்சி கிடைக்கும். வாய்ப்புண், ஈறுகளில் வீக்கம் போன்ற நோய்களைக் குணமாக்க அத்திபழ இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் சரியாகிவிடும்.

போதை பழக்கம்

போதைப் பழக்கம் மற்றும் குடிபழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பாதிப்படையும். அவ்வாறு பாதிக்கபட்டவர்கள் அத்திபழத்தை  வினிகரில் ஊற வைத்து தினமும் 2 சாப்பிட்டு வருவதின் மூலம் விரைவில் குணமடையலாம்.

சிறுநீர் அழற்சி 

நீர் கடுப்பு, பித்தப்பை கல், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய்,  சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

இரத்த அணுக்கள் உற்பத்தி

ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அத்திபழத்தை அடிக்கடி சாப்பிடுவதின் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.


Previous Post Next Post