-->

கிரிவலம் பற்றி நீங்கள் அறிந்ததும், அறியாததும்


கிரிவலம் பற்றி  தெரியாத விஷயங்கள்

கிரி என்றால் மலை, வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவது கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது. மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படுவது புனித மலையாக கருதும் மலையையோ அல்லது கோயில் அமைந்த மலையையோ வலம் வருவதாகும். கயிலை மலையை கூட வலம் வரும் வழக்கம் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் கிரிவலம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை கிரிவலம் தான். அங்கு பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்களுக்கு கிடைக்கின்றன என்பது  பக்தர்களின் ஆபார நம்பிக்கை.


திருவண்ணாமலை மலையின் அமைப்பு


திருவண்ணாமலை அருணாச்சல மலை என்றும் அழைக்கபடுகிறது. அருணாச்சல மலை 2668 அடி உயரமும் 14 கிலோமீட்டர் சுற்றளவும் கொண்டது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவை,

இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவையே  அந்த எட்டு லிங்கங்கள் ஆகும்.

ஆதிப் பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி வலம் வரும்போது மலையை சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் வாழ்வை நல்விதமாக அமைத்துக் கொள்ளவும் உதவுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பெளர்ணமியில் ஏன் கிரிவலம்


ஜோதிடப்படி மனதை ஆள்பவர் சந்திர பகவனவார். அதனால் தான் அவர் மனோகாரகன் என அழைக்கபடுகிறார். சந்திரன் என்றாலே வசீகரம் என்று தான் அர்த்தம். உலகில் 84 லட்சம் உயிரினங்கள் இருக்கிறதாக வேதங்கள் கூறுகிறது. இவைகளுக்கு உயிர்ப்பு ஆற்றல் கிடைக்கக் கூடிய நாள் தான் ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி. அந்த குறிப்பிட்ட நாளில் கிரிவலம் வந்தால் உடலின் ஆகர்ஷண சக்தி அதிகரிக்கும். ஆத்ம பலம் பெறும்.

கிரிவம் செல்வோர் தவிர்க்க வேண்டியவை


கிரிவலம் செல்லும் சமயத்தில்
1. தேவை இல்லாமல் உடன் இருப்பவர்களுடன் பேசகூடாது
2. ஏதேனும் நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே சுற்ற கூடாது.
3. கிரிவலம் செல்லும் போது, வேகவாக நடந்தோ அல்லது ஓடவோ கூடாது.
4. கிரிவலம் செல்லும்போது மனம் அலைபாயகூடாது, மனம் இறைவனை நினைத்து கொண்டே இருக்க வேண்டும்.



கிரிவலம் செல்வதால் உண்டாகும் நன்மைகள்


1. பாவங்கள் நீங்கும்.

2. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

3. சித்தர்கள் அருள் கிடைக்கப்பெறும்.

4. வாழ்வில் நல்ல காரியங்கள் எல்லாம் நடந்தேறும்.

5. வறுமை நீங்கி பொருளாதாரம் நல்ல விதத்தில் முன்னேறும்.


Previous Post Next Post