பாரம்பரிய சம்பா அரிசியும், அவற்றின் வகைகளும் - Expres Tamil

Header Ads

பாரம்பரிய சம்பா அரிசியும், அவற்றின் வகைகளும்


சம்பா அரிசி

சம்பா என்பது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா பயிர் செய்யப்படுகிறது. பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் பல காலமாக சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. கால மாற்றத்தால் குறிப்பிட்ட நெல் ரகங்களே அதிகம் பயிரிடப்பட்டு பல நெல் ரகங்கள் தற்போது பயன்பாட்டில் இருந்தே மறைந்து விட்டன.

சம்பா அரிசி வகைகள்


பாரம்பரிய நெல் வகைகள்

இந்தியாவில் சுமார் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் புழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போதோ 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது.
இந்தியாவில் நூற்றுக்கும் அதிகமான நெல் ரகங்களை நம் முன்னோர்கள்  பயன்படுத்தியதற்கான சான்றுகளும் உள்ளன. அவர்களின் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் ஆதாரமே இந்த பாரம்பரிய நெல் ரகங்கள் தான். நெல்லின் தன்மையையும், வளரும் விதத்தையும் பொருத்து நெல் வகைகள் பிரிக்கப்பட்டன.

பாரம்பரிய நெல் வகைகளில் சம்பா வகைகள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இவ்வகை நெல் ரகங்கள் அதிகம் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில் பல வகைகள் உள்ளன.

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா நெல் பயிர் செய்யப்படுகிறது. சம்பா சாகுபடியானது புரட்டாசி அல்லது  ஐப்பசி மாதங்களில் நீண்டகால பயிராக விதைப்பார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு தை மாதம் அறுவடை செய்து பொங்கல் வைப்பார்கள்.

சம்பா நெல் ரகங்கள்


சம்பா நெல் ரகங்கள்

தற்போது புழக்கத்தில் உள்ள பிரபலமான சம்பா நெல் ரகங்கள்,  

அரும்போக சம்பா, இராவணன் சம்பா, இலுப்பைப்பூ சம்பா, ஈர்க்குச் சம்பா, கட்டை சம்பா, கப்பச்சம்பா, கருடன் சம்பா, கருப்புச் சீரக சம்பா, களர்சம்பா, கர்நாடக சீரக சம்பா, கல்லுண்டைச் சம்பா, காடைச் சம்பா, காளான் சம்பா, கார்த்திகை சம்பா, கிச்சலி சம்பா, குண்டுச் சம்பா, குறுஞ்சம்பா, குன்றிமணிச்சம்பா, கைவரச்சம்பா, கோடைச் சம்பா, கோரைச் சம்பா, சம்பா மோசனம், சடைச் சம்பா, சிவப்பு சீரகச் சம்பா, சீரகச் சம்பா, செஞ்சம்பா, தோட்டச் சம்பா, பெரிய சம்பா, புனுகுச் சம்பா, புழுகுச் சம்பா, பூஞ்சம்பா, மல்லிகைப்பூ சம்பா, மணிச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, மிளகுச் சம்பா, மைச்சம்பா, நரிக்குருவை நீலச்சம்பா, வளைத்தடிச் சம்பா, வாடன் சம்பா, வாலான் சம்பா, வெள்ளை சீரக சம்பா.

ஒவ்வொரு வகை சம்பா அரிசிக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. மேலும் ஏராளமான மருத்துவ பயன்களும் உண்டு.

No comments