-->

சாதனை நாயகன் சச்சின் டெண்டுலக்ரின் வாழ்க்கை வரலாறு



சச்சின் டெண்டுல்கர்

கிரி்க்கெட் என்பது ஒரு மதமாக இருந்தால், அதன் கடவுள் சச்சின் டெண்டுல்கர்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இந்தியாவில் முதன் முதலாக 1987ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடைபெற்றபோது மைதானத்தில் பந்துகளை எடுத்துக் கொடுக்கும் 'பால் பாய்'-ஆக சச்சின் இருந்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் முதலில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என அசைபட்டார். இதற்கு என்று எம்.ஆர்.எஃப் வேகப்பந்து அகாடமிக்கு வந்த அவர் ஆஸ்திரேலியா வீர்ர் டெனிஸ் லில்லியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு காரணம் அவரது உயரம். பின்னர் அவர் பேட்டிங்கில் தனது திறமையை நிருபித்தது வேறு கதை.

கிரிக்கெட் வரலாறு

இந்திய கிரிக்கெட் அணியில் பல திறமையான் வீரர்கள் விளையாடியுள்ளானர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் இந்திய அணிக்காக தங்களுடைய பங்களிப்பை அளித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றை எப்போது படித்தாலும், அதில் முதலில் வருவது சச்சின் டெண்டுல்கர். சச்சின் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடியதுடன், கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகள் புரிந்துள்ளார்.

சாதனைகள்

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்கள், 463 ஒருதினப் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100ம் மேற்பட்ட சதங்கள், டெண்டுல்கரின் சாதனைகளை இன்றைய காலகட்டத்தில் முறியடிப்பது என்பது சாதாரணமாக விஷயமில்லை. சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனைகளைப் படைப்பதற்கு எவ்வளவு தடைகளை, தாண்டி வந்தார் என்பது, அவருடைய 30 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றை படித்தால் மட்டுமே தெரியும்.

ஓய்வு

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 11 வயது முதலே கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக ஒரே ஒரு டி-20 போட்டியில் மட்டுமே பங்கேற்ற சச்சின், 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2013ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். 

விருதுகள்

கிரிக்கெட் விளையாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சச்சினின் சாதனைகளை பாராட்டும் விதமாக இந்திய அரசு அவருக்கு அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ராஜ்ய சபா எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். இன்று தனது 45வது பிறந்தநாளை சச்சின் கொண்டாடுகிறார். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பிறந்த நாள் காணும் அவரை நாமும் வாழ்த்துவோம்.

Previous Post Next Post