-->

மட்டன் மிளகு கறி - Mutton Milagu Kari

மட்டன் மிளகு வறுவல்

தேவையான பொருட்கள்:
  1. மட்டன் - 500 கிராம்
  2. வர மிளகாய் - 3
  3. மிளகுத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
  4. சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
  5. பூண்டு - ஒரு முழு பூண்டு
  6. எண்ணெய் - 5 தேக்கரண்டி
  7. வெங்காயம் - 4
  8. கருவேப்பிலை - தேவையான அளவு
  9. கொத்தமல்லி – தேவையான அளவு


செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி காய வைத்து அதில் வர மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

2. பின்னர் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

3. பின் கறியுடன் தேவையான அளவு  உப்பு சேர்த்து கிளறி மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.

4 .இறுதியாக மிளகு தூள், சீரகத் தூள் சேர்த்து மீண்டும் கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான காரசாரமான  மட்டன் மிளகு கறி ரெடி.

மேலும் பல வகையான மட்டன் உணவுகளை காண இங்கே click செய்யவும்.


Previous Post Next Post